பொன்னேரி : 'வியாபாரிகள், பணியாளர்கள் தடுப்பூசி செலுத்திய சான்று இல்லையெனில், கடைகள் மற்றும் நிறுவனங்கள் செயல்பட தடை விதிக்கப்படும்' என, பேரூராட்சி நிர்வாகம் அறிவுறுத்தி உள்ளது.
பொன்னேரி பேரூராட்சி உட்பட பகுதிகளில் செயல்படும் கடைகள் மற்றும் வணிக நிறுவனங்களில் உள்ள வியாபாரிகள் மற்றும் பணியாளர்கள் அவசியம் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என, பேரூராட்சி நிர்வாகம் சுற்றறிக்கை மூலம் அறிவுறுத்தி உள்ளது.சுற்றறிக்கையில் உள்ளதாவது:தடுப்பூசி செலுத்தப்பட்ட பணியாளர்களே கடையினுள்ளே பணிபுரிய அனுமதிக்க வேண்டும்.
அவர்கள் தடுப்பூசி செலுத்திக் கொண்டதற்கான சான்று வைத்திருக்க வேண்டும்.தடுப்பூசி செலுத்திய சான்று இல்லாத, செலுத்திக் கொள்ளாத வியாபாரிகள் மற்றும் பணியாளர்கள் உள்ள வணிக மற்றும் தொழில் நிறுவனங்கள் செயல்பட தடை விதிக்கப்படும்.வணிக நிறுவனங்களில் உள்ள அனைத்து பணியாளர்களும் கொரோனா தடுப்பூசி செலுத்தி இருந்தால், கடைகளில் அனைத்து பணியாளர்களுக்கும் தடுப்பூசி போடப்பட்டு உள்ளது' என, கடையின் முகப்பில் போர்டு வைக்க வேண்டும்.இவ்வாறு அதில் உள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE