பொது செய்தி

தமிழ்நாடு

மரம் வளர்த்து மகிழ்ச்சி காணும் தலைமை ஆசிரியர்

Added : செப் 12, 2021
Share
Advertisement
ராமநாதபுரம் : கல்வி அறிவை மாணவர்களுக்கு வளர்ப்பதோடு நின்று விடாமல்மரம் வளர்ப்பின் அவசியத்தை பிஞ்சு உள்ளங்களில் பதிப்பதற்காக பள்ளி வளாகம் முழுவதும் மரக்கன்றுகளை வைத்து வளர்த்து மகிழ்ச்சி காண்கிறார் தலைமை ஆசிரியர் ஒருவர்.மாதா, பிதா, குரு, தெய்வம் என்று கூறும் போது பெற்றோருக்கு அடுத்த இடத்தில் நிற்பவர்நமக்கு கல்வி புகட்டி வாழ்வின் முன்னேற்றத்திற்கு ஏணியாக
 மரம் வளர்த்து மகிழ்ச்சி காணும் தலைமை ஆசிரியர்

ராமநாதபுரம் : கல்வி அறிவை மாணவர்களுக்கு வளர்ப்பதோடு நின்று விடாமல்மரம் வளர்ப்பின் அவசியத்தை பிஞ்சு உள்ளங்களில் பதிப்பதற்காக பள்ளி வளாகம் முழுவதும் மரக்கன்றுகளை வைத்து வளர்த்து மகிழ்ச்சி காண்கிறார் தலைமை ஆசிரியர் ஒருவர்.

மாதா, பிதா, குரு, தெய்வம் என்று கூறும் போது பெற்றோருக்கு அடுத்த இடத்தில் நிற்பவர்நமக்கு கல்வி புகட்டி வாழ்வின் முன்னேற்றத்திற்கு ஏணியாக இருக்கும் ஆசிரியர் பெருமக்கள்.ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ்.மங்கலம் ஒன்றியம் திருப்பாலைக்குடி ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் எஸ்.ராஜூ 51.

சோழந்துார் அருகே சினாங்குடி என்ற கிராமத்தை சேர்ந்த இவர், 2014 முதல் இப்பள்ளியில் தலைமை ஆசிரியராக பணியாற்றுகிறார்.1938 அக்.23ல் இப்பள்ளி துவக்கப்பட்டு ஆரம்ப பாடசாலையாக செயல்பட்டு வந்தது. அரசுபள்ளி என்றாலே அப்படித்தான் என்ற நிலையை மாற்றி இன்று ஆர்.எஸ்.மங்கலம் ஒன்றியத்திலேயே அதிக மாணவர்கள் படிக்கும் துவக்க பள்ளியாக தலை நிமிர செய்துள்ளார் தலைமை ஆசிரியர் ராஜூ.

அவருக்கு இப்பள்ளி ஆசிரியைகள் பாகம்பிரியாள், விஜயலட்சுமி, பொன்ரேகா உறுதுணையாக இருப்பதாகவும், தற்போது 240 மாணவர்கள் படிப்பதாகவும், 2021--22 கல்வி ஆண்டில் மட்டும் 40 மாணவர்கள் முதல் வகுப்பில் சேர்ந்துள்ளதாக பெருமையுடன் கூறினார்.

இனி அவரது மகிழ்ச்சி வார்த்தைகள்...

2014ல் இங்கு பொறுப்பேற்ற போது, பள்ளி வளாகம் பெரிய பள்ளமானஇடத்தில் இருந்தது. பள்ளி வளாகத்தை பொது பாதையாக பயன்படுத்தி வந்தனர். 2 ஏக்கரில் உள்ள வளாகம் முட்புதர்களாக இருந்தது. இதனை மாற்றி சீரமைத்தேன். உப்பூர் அனல் மின் நிலைய கட்டுமானத்திற்கு தோண்டிய மண்ணை கேட்டு 20 லோடு கொண்டு வந்து நிரப்பி பள்ளத்தை சமதளப்படுத்தினேன்.

இந்த பகுதி அதிகளவு உப்பு நீர் கொண்டது. தரையே உப்பு பொரியும்தன்மை கொண்டது. இதனால் முதலில் மரக்கன்றுகள் வளர்க்கும் எண்ணம் வரவில்லை. 2015 ஜூலை 27ல் அப்துல்கலாம் மறைந்தார். அவரது நினைவாக அடுத்த நாளில் பள்ளி வளாகத்தில் இரண்டு மரக்கன்றுகளை நட்டு பராமரித்தேன்.

அது நன்றாக வளர்ந்தது.இதனை பார்த்த போது மனதில் மகிழ்ச்சிபொங்கியது. ஏன் வளாகம் முழுவதும் மரக்கன்றுகளை நட்டு கலாம் வழியில் பசுமை பள்ளியாகஇவ்வளாகத்தை மாற்றக்கூடாது என்ற எண்ணம் ஏற்பட்டது. அதன்படி தலைவர்கள் பிறந்த நாள், நினைவு நாள் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளின் போது பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகளை நட்டு வளர்க்க துவங்கினேன்.

இப்போது, இங்குள்ள ஒன்றரை ஏக்கரில் புங்கன், வேம்பு, ஆலமரம், அரசமரம், பாதாம், சுவர்க்க மரம், நெல்லி உள்ளிட்ட பல வகையான 110 மரங்கள் நன்கு வளர்ந்த நிலையில் உள்ளன. கடல் அருகில் இருப்பதாலும், இங்கு தண்ணீர் கடல் நீர் போல் உவர்ப்பாக இருப்பதால் அதனை பயன்படுத்த முடிவதில்லை.இதனால் மாதம் 6 டிராக்டரில் டேங்கர் தண்ணீரை வாங்கி மரங்களுக்கு ஊற்றுகிறோம்.

மீதம் தண்ணீரை இங்குள்ள தொட்டிகளில் சேமித்து வைக்கிறோம். இதற்காக மாதம் ரூ.10 ஆயிரம் எனது சொந்த பணத்தை செலவிடுகிறேன். மாணவர்களும், என்னோடு சேர்ந்து மரம் வளர்ப்பில் ஆர்வம் காட்டுகின்றனர்.அவர்களுக்கு மரங்களால் கிடைக்கும் நன்மைகள், மரம் வளர்த்தால் மழை பெறலாம் என்பதை விளக்குகிறோம்.

விடுமுறை நாட்களிலும் பள்ளிக்கு வந்து விடுவேன். எம் பள்ளி மாணவர்களோடு இம் மரங்களின்வளர்ச்சியில் தான் எனது மகிழ்ச்சியே உள்ளது, என்றார் மன நிறைவோடு. கலெக்டர், முதன்மைகல்வி அலுவலரும் தனது முயற்சிக்கு ஊக்கம் அளித்து பாராட்டியதாக தெரிவித்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X