பொது செய்தி

தமிழ்நாடு

'போதை'யில் பெயின்டர் தற்கொலை

Added : செப் 12, 2021
Share
Advertisement
காஞ்சிபுரம் : திருமணம் செய்து வைக்கும்படி பெற்றோரிடம் சண்டை போட்ட பெயின்டர், 'குடி'போதையில் தற்கொலை செய்து கொண்டார்.காஞ்சிபுரம், மஹாத்மா காந்தி நகர் சலவை தொழிலாளி குடியிருப்பு பகுதியைச் சேர்ந்தவர் ஆறுமுகம், 32. பெயின்டர் வேலை பார்த்து வந்தார்.அடிக்கடி குடித்து விட்டு தனக்கு திருமணம் முடித்து வைக்கும்படி, வீட்டில் பெற்றோரிடம் தகராறு செய்துள்ளார்.இந்நிலையில்,

காஞ்சிபுரம் : திருமணம் செய்து வைக்கும்படி பெற்றோரிடம் சண்டை போட்ட பெயின்டர், 'குடி'போதையில் தற்கொலை செய்து கொண்டார்.

காஞ்சிபுரம், மஹாத்மா காந்தி நகர் சலவை தொழிலாளி குடியிருப்பு பகுதியைச் சேர்ந்தவர் ஆறுமுகம், 32. பெயின்டர் வேலை பார்த்து வந்தார்.அடிக்கடி குடித்து விட்டு தனக்கு திருமணம் முடித்து வைக்கும்படி, வீட்டில் பெற்றோரிடம் தகராறு செய்துள்ளார்.இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு, அவருக்கும், பெற்றோருக்கும் தகராறு நடந்துள்ளது.

பின், ஆறுமுகம் துாங்க சென்றார்.காலையில் நீண்ட நேரமாகியும் அவர் துாங்கிய அறை கதவு திறக்கவில்லை. சந்தேகப்பட்ட பெற்றோர், கதவை உடைத்து பார்த்த போது துாக்கிலிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது.காஞ்சிபுரம் தாலுகா போலீசார், ஆறுமுகம் உடலை, பிரேத பரிசோதனைக்கு, காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X