சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கோவை எக்ஸ்பிரசில் தவறவிட்ட சூட்கேஸ் பெரம்பூரில் மீட்பு

Added : செப் 12, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
சென்னை-கோவை எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணி விட்டுச் சென்ற சூட்கேஸ், பெரம்பூர் ரயில் நிலையத்தில் மீட்கப்பட்டது.திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டையைச் சேர்ந்தவர் ஆனந்தகுமார், 59. இவர் குடும்பத்தினருடன் நேற்று முன்தினம், கோவையில் இருந்து சென்னை சென்ட்ரல் செல்லும் ரயிலில், 'டி - 4' பெட்டியில் பயணம் செய்தார். காட்பாடியில் இறங்கி ராணிப்பேட்டை சென்று விட்டார்.அதன்பின், நகைகள்

சென்னை-கோவை எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணி விட்டுச் சென்ற சூட்கேஸ், பெரம்பூர் ரயில் நிலையத்தில் மீட்கப்பட்டது.

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டையைச் சேர்ந்தவர் ஆனந்தகுமார், 59. இவர் குடும்பத்தினருடன் நேற்று முன்தினம், கோவையில் இருந்து சென்னை சென்ட்ரல் செல்லும் ரயிலில், 'டி - 4' பெட்டியில் பயணம் செய்தார். காட்பாடியில் இறங்கி ராணிப்பேட்டை சென்று விட்டார்.அதன்பின், நகைகள் வைத்திருந்த சூட்கேசை ரயிலில் மறந்து விட்டு வந்தது தெரிந்தது. உடனடியாக காட்பாடி ரயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.

ரயில், காட்பாடிக்கு அடுத்ததாக பெரம்பூரில் தான் நிற்கும் என்பதால், பெரம்பூர் ரயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. பெரம்பூரில் ரயில்வே போலீசார் அந்த பெட்டியில் சோதனை செய்த போது சூட்கேஸ் இருந்தது. அதில் மோதிரம், கம்மல் உட்பட 1 லட்சத்து 62 ஆயிரத்து 500 ரூபாய் மதிப்புள்ள தங்க ஆபரணங்கள் இருந்தன. சம்பந்தப்பட்ட பயணிக்கு தகவல் அளித்து, சென்னை வரவழைத்து அவரிடம் ஒப்படைத்தனர்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
THINAKAREN KARAMANI - Vellore,இந்தியா
13-செப்-202120:52:53 IST Report Abuse
THINAKAREN KARAMANI தவறவிட்ட சூட்கேசை சுறுசுறுப்பாக செயல்பட்டு அதை அந்தப் பெரியவரிடம் ஒப்படைத்த பெரம்பூர் ரயில்வே போலீசாருக்கும் உடனடியாக தகவல் அளித்த காட்பாடி ரயில்வே போலீசாருக்கும் பாராட்டுக்கள். THINAKAREN KARAMANI, VELLORE, INDIA.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X