அரசியல் செய்தி

தமிழ்நாடு

தினகரன் மகள் திருமணம் கட்சியினர் வர தடை

Added : செப் 12, 2021 | கருத்துகள் (4)
Share
Advertisement
சென்னை-அ.ம.மு.க., பொதுச்செயலர் தினகரன் மகள் ஜெயஹரிணியின் திருமணம், 16ம் தேதி, திருவண்ணாமலையில் நடைபெற உள்ளது. தினகரன் அறிக்கை:என் மகள் ஜெயஹரிணிக்கும், ராமநாத துளசி அய்யா வாண்டையாருக்கும், வரும், 16ம் தேதி, திருவண்ணாமலையில் திருமணம் நடைபெறவுள்ளது. கட்சியினர் அனைவரும் குடும்பத்தினரோடு வந்திருந்து, திருமணத்தை நடத்த வேண்டும் என்பதே என் விருப்பம். எனினும், கொரோனா பேரிடர்
 தினகரன் மகள் திருமணம்  கட்சியினர் வர தடை

சென்னை-அ.ம.மு.க., பொதுச்செயலர் தினகரன் மகள் ஜெயஹரிணியின் திருமணம், 16ம் தேதி, திருவண்ணாமலையில் நடைபெற உள்ளது.

தினகரன் அறிக்கை:என் மகள் ஜெயஹரிணிக்கும், ராமநாத துளசி அய்யா வாண்டையாருக்கும், வரும், 16ம் தேதி, திருவண்ணாமலையில் திருமணம் நடைபெறவுள்ளது. கட்சியினர் அனைவரும் குடும்பத்தினரோடு வந்திருந்து, திருமணத்தை நடத்த வேண்டும் என்பதே என் விருப்பம். எனினும், கொரோனா பேரிடர் பாதிப்பு, இன்னும் முழுமையாக விலகாத நிலையில், உங்கள் ஒவ்வொருவரின் பாதுகாப்பும் முக்கியம்.

அதனால், தங்கள் அனைவரின் முன்னிலையில் திருமண விழாவை நடத்த முடியாத சூழல் ஏற்பட்டு இருக்கிறது.இல்லறம்ஏற்கும் மணமக்கள் பல்லாண்டு காலம் சீரோடும், சிறப்போடும் வாழ்ந்திட, தங்களின் மனப்பூர்வமான அன்பையும், இதயம் நிறைந்த வாழ்த்துகளையும் தந்திட வேண்டுகிறேன். இறையருளால் கொரோனா சூழல் மாறியவுடன், நல்விருந்து ஒன்றில் சந்திப்போம்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Bhaskaran - Chennai,இந்தியா
14-செப்-202102:02:50 IST Report Abuse
Bhaskaran புது மனமக்களுக்கு வாழ்த்துக்கள் என் நண்பருக்கு அழைப்பிதழ் வந்தது பார்த்தேன்
Rate this:
Cancel
NicoleThomson - chikkanayakanahalli,வலிமையான இந்திய கண்டம் ,இந்தியா
13-செப்-202121:18:16 IST Report Abuse
NicoleThomson யோவ் உன்னோட பெர்சனல் செக்ரட்டரி சரவணன் இன்னமும் இருக்கானா?
Rate this:
Cancel
Hari - chennai,சவுதி அரேபியா
13-செப்-202110:01:55 IST Report Abuse
Hari புதிய வாழ்க்கையை தொடரப்போகும் மணமக்களுக்கு வாழ்த்துக்கள் .
Rate this:
கௌடில்யன் - Chennai ,இந்தியா
14-செப்-202106:39:14 IST Report Abuse
கௌடில்யன்சென்னையா ..சவுதியா ...தொடரப்போறாங்களா ..தொடங்கப்போறாங்களா .......
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X