அரசியல் செய்தி

தமிழ்நாடு

'மத்திய அரசு மாறவில்லை' 'நீட்' தேர்வால் முதல்வர் விரக்தி

Added : செப் 12, 2021 | கருத்துகள் (2)
Share
Advertisement
சென்னை; 'நீட் தேர்வில் முறைகேடு, கேள்வித்தாள் கசிவு, ஆள்மாறாட்டம் உள்ளிட்ட பல்வேறு மோசடிகளும், மாணவ - மாணவியர் தற்கொலைகளும், மத்திய அரசின் மனதை மாற்றவில்லை' என, முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.அவரது அறிக்கை:'நீட்' நுழைவுத் தேர்வு அச்சம் காரணமாக, தனுஷ் என்ற மாணவர் தற்கொலை செய்த செய்தியறிந்து, மிகுந்த அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன். அவரது பெற்றோருக்கும்,

சென்னை; 'நீட் தேர்வில் முறைகேடு, கேள்வித்தாள் கசிவு, ஆள்மாறாட்டம் உள்ளிட்ட பல்வேறு மோசடிகளும், மாணவ - மாணவியர் தற்கொலைகளும், மத்திய அரசின் மனதை மாற்றவில்லை' என, முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.

அவரது அறிக்கை:'நீட்' நுழைவுத் தேர்வு அச்சம் காரணமாக, தனுஷ் என்ற மாணவர் தற்கொலை செய்த செய்தியறிந்து, மிகுந்த அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன். அவரது பெற்றோருக்கும், உறவினர்களுக்கும் ஆழ்ந்த இரங்கல்.இரண்டு முறை தேர்வு எழுதியும், தேர்ச்சி பெற முடியாத அளவுக்கு கிராம, நகர்ப்புற ஏழை மாணவர்களுக்கு, நீட் தேர்வு பாதிப்பை ஏற்படுத்துகிறது.

இதனால் மனமுடைந்து, தனுஷ் தற்கொலை செய்துள்ளார்.நீட் தேர்வு ஏற்படுத்தும் மிகப்பெரிய சிரமங்களை புரிந்து கொள்ளாத மத்திய அரசின் அலட்சியமும், பிடிவாதமும், நாட்டின் நம்பிக்கை நட்சத்திரங்களாக வர வேண்டிய மாணவ - மாணவியரின் தற்கொலைக்கு காரணமாக தொடர்ந்து அமைந்து வருகிறது.

தேர்வில் முறைகேடு, கேள்வித்தாள், 'லீக்' மற்றும் ஆள்மாறாட்டம் உள்ளிட்ட பல்வேறு மோசடிகளும், மாணவ - மாணவியர் தற்கொலைகளும், மத்திய அரசின் மனதை மாற்றவில்லை.இது, கல்வியானது மாநில பட்டியலுக்கு வந்தே தீர வேண்டும் என்ற அவசியத்தை மேலும் வலுவடைய வைக்கிறது.ஆட்சி பொறுப்பேற்ற பின், நீட் தேர்வுக்கு எதிரான நம் சட்ட போராட்டம் இப்போது துவங்குகிறது.

சட்டசபையில், நீட் தேர்வில் இருந்து நிரந்தர விலக்கு பெறும் மசோதா நிறைவேற இருக்கிறது.இதை, மாநில முதல்வர்களின் கவனத்துக்கு எடுத்துச் சென்று, ஆதரவு திரட்டி வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை இருக்கிறது.மாணவ செல்வங்கள் மனம் தளர வேண்டாம். சிறந்த எதிர்காலத்தை உங்களுக்கு அமைத்து தரும் பெரும் பொறுப்பும், கடமையும் இந்த அரசுக்கு இருக்கிறது. அந்த பொறுப்பை உணர்ந்து, நீட் தேர்வை மத்திய அரசு நீக்கும் வரை, சட்ட ரீதியான போராட்டம் தொடரும். மாணவர்கள் யாரும் விபரீத முடிவுகளை எடுக்க வேண்டாம்.இவ்வாறு, முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Nanban - Kajang,மலேஷியா
13-செப்-202107:33:52 IST Report Abuse
Nanban நீ என்ன சொல்லி ஆட்சியை பிடித்தாய் ,நீயும் உன் மகனும் தமிழகம் முழுவதும் எங்களுக்கு தெரியும் நீட் தேர்வை எப்படி ரத்து செய்வது என்று உதார் விட்டீர்கள் , தமிழக மக்களும் இது கோர்ட்டின் முடிவு என்றாலும் நீங்கள் தா .கிருட்டிணன் வழக்கையே நீர்த்து போக செய்தவர்களாச்சே அதைப்போல நீட் தேர்வையும் சொன்னதுபடி ரத்து செய்துவிடுவீர்கள் என்று நம்பி இஹ்தி மு க என்னும் தீய கட்சிக்கு வோட்டு போட்டார்கள் அதன் விளைவு மாணவர் தற்கொலை , இனி யாரும் உங்களை நம்ப மாட்டார்கள் இதுதான் தி மு க வின் கடைசி ஐந்தாண்டுகள் நினைவில் கொள்ளுங்கள்.
Rate this:
Cancel
BASKAR TETCHANA - Aulnay ,பிரான்ஸ்
13-செப்-202102:53:42 IST Report Abuse
BASKAR TETCHANA சிஸ்டமே சரியில்லா சிறந்த முதல்வர் ஸ்டாலின் அவர்களே எதையும் பணம் கொடுத்து விலைக்கு வாங்கி விடலாம் என்று நினைக்க வேண்டாம். இது ஒரு மாணவனின் வாழ்க்கை கனவு லட்சியம். எதற்கு எடுத்தாலும் மத்திய அரசை குறைகூறும் நீ நன்றாக ஆராயவேண்டும் . சில பேர்கள் குழு என்ற பெயரில் கொஞ்சம் சம்பாதித்து கொண்டார்கள். உங்களுக்கு ஒரு கட்சி தலைவர் பதவி வெட்கமாயிருக்கு. மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுங்கள். ஜெய் ஹிந்த்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X