பொது செய்தி

தமிழ்நாடு

முடங்கியது தொழிலாளர் நலவாரிய பணிகள்; நலத்திட்ட உதவிகளை பெற முடியாமல் தவிப்பு

Added : செப் 12, 2021
Share
Advertisement
பரமக்குடி : ராமநாதபுரம் மாவட்டத்தில் அமைப்பு சாரா தொழிலாளர் நல வாரியத்தில் நிரந்தர அலுவலர்கள் இன்றி நலவாரிய பணிகள் முடங்கியுள்ளன. தொழிலாளர்கள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகி உள்ளனர்.அமைப்பு சாரா தொழிலாளர்கள் நல வாரியத்தில்பதிவு செய்தல், புதுப்பித்தல், கல்வி உதவித்தொகை, ஓய்வூதியம் பெறுதல் போன்ற பணிகள்ஆன்லைன் மூலமாக நடக்கிறது. 60 வயது பூர்த்தி அடைந்த

பரமக்குடி : ராமநாதபுரம் மாவட்டத்தில் அமைப்பு சாரா தொழிலாளர் நல வாரியத்தில் நிரந்தர அலுவலர்கள் இன்றி நலவாரிய பணிகள் முடங்கியுள்ளன.

தொழிலாளர்கள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகி உள்ளனர்.அமைப்பு சாரா தொழிலாளர்கள் நல வாரியத்தில்பதிவு செய்தல், புதுப்பித்தல், கல்வி உதவித்தொகை, ஓய்வூதியம் பெறுதல் போன்ற பணிகள்ஆன்லைன் மூலமாக நடக்கிறது. 60 வயது பூர்த்தி அடைந்த தொழிலாளர்கள்ஆன்லைனில் பதிவு செய்ய முடியாமல் உள்ளனர். தொடர்ந்து 10 ஆண்டுகளுக்கும் மேலாக புதுப்பித்த தொழிலாளர்களின் கணினி பதிவு இல்லை, என்கின்றனர். இதனால் ஓய்வு ஊதியம் பெற முடியாமல் தவிக்கும் நிலை உள்ளது.

அலுவலகத்தில் கணினி இயக்குனர் பணியிடம் பல மாதங்களாக காலியாக உள்ளது. அலுவலக கண்காணிப்பாளர் பணியிடம் காலியாக உள்ளதுடன், தொழிலாளர் நல அலுவலர் மருத்துவ விடுப்பில் சென்று விட்டார்.பாரதிய மஸ்துார் சங்கம் செயலாளர் மோகன்ராம் கூறியபோது, அனைத்து தொழிலாளர்களின் கோரிக்கைகளும் கையெழுத்திடாமல் கிடப்பில்உள்ளன. மேலும் ஆன்லைன் பதிவுகளில் குளறுபடி உள்ளதால் தொழிலாளர்கள் ஓய்வூதியம் உள்ளிட்ட எந்த பலனையும் பெற முடியாமல் உள்ளனர்.தொழிலாளர்களின் சிரமம் கருதி, அரசு மாவட்ட தொழிலாளர் நலத்துறையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X