சாயல்குடியில் அதிகாலை பஸ் இல்லாததால் அவதி

Added : செப் 12, 2021
Share
Advertisement
சாயல்குடி, : பஸ் ஸ்டாண்டிலிருந்து அதிகாலை 4:00 மணி முதல் வெளியூர்களுக்கு பஸ்களை இயக்குவது வழக்கம்.சாயல்குடியில் காலை 6:00 மணிக்கு தான் அரசு பஸ்கள் இயக்கப்படுவதால்பயணிகள் குறித்த நேரத்திற்கு தாங்கள் செல்ல விரும்பும் வெளியூர்களுக்கு செல்ல முடியாமல் அவதிப்படுகின்றனர்.கீழச்செல்வனுாரைச்சேர்ந்த பொன் இருளாண்டி கூறியதாவது:ராமநாதபுரத்தில் இருந்து சாயல்குடிக்கு காலை 6:00

சாயல்குடி, : பஸ் ஸ்டாண்டிலிருந்து அதிகாலை 4:00 மணி முதல் வெளியூர்களுக்கு பஸ்களை இயக்குவது வழக்கம்.சாயல்குடியில் காலை 6:00 மணிக்கு தான் அரசு பஸ்கள் இயக்கப்படுவதால்பயணிகள் குறித்த நேரத்திற்கு தாங்கள் செல்ல விரும்பும் வெளியூர்களுக்கு செல்ல முடியாமல் அவதிப்படுகின்றனர்.

கீழச்செல்வனுாரைச்சேர்ந்த பொன் இருளாண்டி கூறியதாவது:ராமநாதபுரத்தில் இருந்து சாயல்குடிக்கு காலை 6:00 மணிக்கு பஸ் வருகிறது. அதே போல் துாத்துக்குடியில் இருந்து சாயல்குடி 6:00 மணிக்கு பஸ் வருகிறது. காலை 4:00 மணிக்கு சாயல்குடியில் இருந்து பஸ்கள் இயக்கப்படாததால் வெளியூர்களுக்கு செல்லும் பயணிகள் குறித்த நேரத்திற்கு செல்ல முடியாமல் அவதிப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.

சாயல்குடியை சுற்றி 100க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளது. எனவே பஸ் பயணிகளின் நலன் கருதி சாயல்குடிநகரில்இருந்து அதிகாலை 4:00 மணிக்கு பிற ஊர்களுக்கு பஸ்களை இயக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்,என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X