பொது செய்தி

தமிழ்நாடு

ராமநாதபுரத்திற்கு பஸ் வசதியில்லை காரங்காடு, முள்ளிமுனை மக்கள் அவதி

Added : செப் 12, 2021
Share
Advertisement
தொண்டி : காரங்காடு, முள்ளிமுனையிலிருந்து ராமநாதபுரத்திற்கு பஸ் வசதியில்லாததால் பயணிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.தொண்டி அருகே காரங்காடு, முள்ளிமுனை கிராமங்கள் உள்ளன. கடற்கரை பகுதியான இக் கிராமங்களிலிருந்து ராமநாதபுரத்திற்கு நேரடியாக பஸ் வசதியில்லை.முள்ளிமுனை ஊராட்சி தலைவர் அமிர்தவள்ளி கூறியதாவது:மதுரையிலிருந்து காரங்காட்டிற்கு அரசு பஸ் செல்கிறது. அந்த பஸ்

தொண்டி : காரங்காடு, முள்ளிமுனையிலிருந்து ராமநாதபுரத்திற்கு பஸ் வசதியில்லாததால் பயணிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தொண்டி அருகே காரங்காடு, முள்ளிமுனை கிராமங்கள் உள்ளன. கடற்கரை பகுதியான இக் கிராமங்களிலிருந்து ராமநாதபுரத்திற்கு நேரடியாக பஸ் வசதியில்லை.முள்ளிமுனை ஊராட்சி தலைவர் அமிர்தவள்ளி கூறியதாவது:மதுரையிலிருந்து காரங்காட்டிற்கு அரசு பஸ் செல்கிறது. அந்த பஸ் முள்ளிமுனை கிராமத்திற்குள் வருவதில்லை.இக்கிராம மக்கள்காரங்காடு விலக்கு ரோட்டிற்கு சென்று அங்குஇருந்து பஸ் ஏறி வெளியூர்களுக்கு செல்கின்றனர்.மேலும் மாவட்ட தலைநகரான ராமநாதபுரத்திற்கு நேரடி பஸ் வசதியில்லை.

மணக்குடி சென்று அங்குஇருந்து ராமநாதபுரம் செல்லவேண்டியதுள்ளது. இக் கிராமங்களை சேர்ந்த மாணவர்கள் ராமநாதபுரத்தில் உள்ள கல்லுாரிகளில் படிக்கின்றனர். அவர்கள் நீண்ட தொலைவில் உள்ள மணக்குடி சென்று பஸ் ஏறி செல்கின்றனர். ஆகவே முள்ளிமுனை, காரங்காடு கிராமத்தில்இருந்து ராமநாதபுரத்திற்குநேரடி பஸ் வசதி ஏற்படுத்த போக்குவரத்து அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X