பொது செய்தி

தமிழ்நாடு

தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 666 வழக்குகளில் ரூ.2.38 கோடி வழங்கல்

Added : செப் 12, 2021
Share
Advertisement
ராமநாதபுரம் : ராமநாதபுரம் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில், ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் தேசிய மக்கள் நீதிமன்றம் நடந்தது. முதன்மை மாவட்ட நீதிபதி சண்முகசுந்தரம் தலைமை வகித்தார். சார்பு நீதிபதி கதிரவன் வரவேற்றார். மாவட்ட நிரந்தர மக்கள் நீதிமன்றநீதிபதி மகிழேந்தி முன்னிலை வகித்தார். ராமநாதபுரம், ராமேஸ்வரம், பரமக்குடி, திருவாடானை என மொத்தம்7 அமர்வுகளில்

ராமநாதபுரம் : ராமநாதபுரம் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில், ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் தேசிய மக்கள் நீதிமன்றம் நடந்தது. முதன்மை மாவட்ட நீதிபதி சண்முகசுந்தரம் தலைமை வகித்தார். சார்பு நீதிபதி கதிரவன் வரவேற்றார். மாவட்ட நிரந்தர மக்கள் நீதிமன்றநீதிபதி மகிழேந்தி முன்னிலை வகித்தார்.

ராமநாதபுரம், ராமேஸ்வரம், பரமக்குடி, திருவாடானை என மொத்தம்7 அமர்வுகளில் நடந்தது.வங்கிகள் உட்பட 110 வாரக்கடன் வழக்கு எடுத்து கொள்ளப்பட்டு 76 வழக்குகளில் தீர்வு தொகையாகரூ.1 கோடியே 09 லட்சத்து 26 ஆயிரம், தொழிலாளர் இழப்பீட்டு சிறு குற்ற வழக்குகள் 553ல் 541 வழக்குகள் முடித்து ரூ.4.07 லட்சம், வாகன விபத்து 68 வழக்குகளில் 28 முடித்து தீர்வு தொகையாக ரூ.1கோடியே 80ஆயிரம் என மொத்தம்1000 வழக்குகளில் 666க்கு தீர்வு காணப்பட்டு ரூ.2கோடியை 38 லட்சத்து 95 ஆயிரம் தீர்வு தொகை அறிவிக்கப்பட்டுள்ளது. மாவட்ட விரைவு மகளிர் நீதிமன்ற நீதிபதிசுபத்ரா, மாவட்ட தலைமை குற்றவியல் நீதித்துறை நீதிபதி கவிதா, மாவட்ட உரிமையியல் நீதிபதி முல்லை, குற்றவியல் நீதிமன்ற நடுவர் மாஜிஸ்திரெட் சிட்டிபாபு, வழக்கறிஞர்கள் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X