பொது செய்தி

தமிழ்நாடு

சிறப்பு முகாம்களில் 30 லட்சம் தடுப்பூசி

Added : செப் 12, 2021
Share
Advertisement
சென்னை--தமிழகத்தில் நேற்று ஒரே நாளில், 30 லட்சம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டது.தமிழகத்தில் மூன்றாம் அலை கொரோனா தொற்றை தவிர்ப்பதற்காக, ஒரே நாளில் 40 ஆயிரம் சிறப்பு முகாம்களில் 20 லட்சம் பேருக்கு தடுப்பூசி போட இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. அதன்படி, நேற்று காலை 7:00 முதல், இரவு 8:30 மணி வரை, மெகா தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டது. இதில், ஆதார் அட்டை இல்லாதவர்களும், அரசால்

சென்னை--தமிழகத்தில் நேற்று ஒரே நாளில், 30 லட்சம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டது.தமிழகத்தில் மூன்றாம் அலை கொரோனா தொற்றை தவிர்ப்பதற்காக, ஒரே நாளில் 40 ஆயிரம் சிறப்பு முகாம்களில் 20 லட்சம் பேருக்கு தடுப்பூசி போட இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.

அதன்படி, நேற்று காலை 7:00 முதல், இரவு 8:30 மணி வரை, மெகா தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டது. இதில், ஆதார் அட்டை இல்லாதவர்களும், அரசால் அங்கீகரிக்கப்பட்ட ஏதேனும் ஒரு ஆதாரத்தை எடுத்து வந்து, தடுப்பூசி போட்டுக் கொண்டனர். தொற்று பரவும் அபாயம் உள்ள பகுதிகள், கேரள மாநிலத்தை ஒட்டிய பகுதிகள் மற்றும் பிற மாநிலங்களை ஒட்டிய பகுதிகளில் அதிக கவனம் செலுத்தப்பட்டது.ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், அங்கன்வாடி மையங்கள், சத்துணவு மையங்கள், பள்ளிகள், ரயில் நிலையங்கள், பூங்காக்கள் உள்ளிட்ட 40 ஆயிரம் மையங்களில் தடுப்பூசி போடப்பட்டது.

இதில், 19 வயதுக்கு மேற்பட்டோர் ஆர்வமுடன் பங்கேற்றனர். நேற்று மட்டும், 30 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. எதிர்பார்த்ததை விட, 10 லட்சம் பேர் கூடுதலாக தடுப்பூசி செலுத்தியதால், அடிக்கடி முகாம்கள் நடத்த அரசு முடிவு செய்துள்ளது.அதிகபட்சமாக, சென்னையில், ௧.௮௫ லட்சம் பேர்; கோவையில், ௧.௫ லட்சம்; திருப்பூரில், ௧.௨ லட்சம் பேரும் தடுப்பூசி போட்டுள்ளனர்

.முதல்வர் பாராட்டு

'தமிழகத்தில் இதுவரை, 4 கோடி தடுப்பூசி செலுத்தப்பட்டு இருப்பது, இமாலய சாதனை' என, முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.அவரது வாழ்த்துச் செய்தி:இதுவரை, 4 கோடி தடுப்பூசி செலுத்தப்பட்டு இருப்பது, இமாலாய சாதனை. மாரத்தான் வேகத்தில் செயல்படும் அமைச்சர் சுப்பிரமணியனுக்கும், மக்கள் நல்வாழ்வுத் துறைக்கும், டாக்டர்கள், செவிலியர்களுக்கும் நன்றி.இவ்வாறு, முதல்வர் கூறியுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X