சிறப்பு கொரோனா தடுப்பூசி முகாம்களில் மருந்து பற்றாக்குறையால் மக்கள் ஏமாற்றம்| Dinamalar

தமிழ்நாடு

சிறப்பு கொரோனா தடுப்பூசி முகாம்களில் மருந்து பற்றாக்குறையால் மக்கள் ஏமாற்றம்

Added : செப் 12, 2021
Share
ராமநாதபுரம் : ராமநாதபுரம் மாவட்டத்தில் நேற்று நடந்த சிறப்பு கொரோனா தடுப்பூசி முகாம்களில் மருந்து பற்றாக்குறையால் மக்கள்ஏமாற்றத்துடன் திரும்பினர்.கொரோனா பரவலை கட்டுப்படுத்தவும், மக்களுக்கு பாதிப்பு ஏற்படுவதை தடுக்கவும் தமிழகம் முழுவதும் சிறப்பு கொரோனா தடுப்பூசி முகாம்களை செப்.12ல் நடத்த தமிழக அரசு உத்தரவிட்டது. இதையடுத்து மாவட்ட நிர்வாகம் இதற்கான பணியில் முழு

ராமநாதபுரம் : ராமநாதபுரம் மாவட்டத்தில் நேற்று நடந்த சிறப்பு கொரோனா தடுப்பூசி முகாம்களில் மருந்து பற்றாக்குறையால் மக்கள்ஏமாற்றத்துடன் திரும்பினர்.

கொரோனா பரவலை கட்டுப்படுத்தவும், மக்களுக்கு பாதிப்பு ஏற்படுவதை தடுக்கவும் தமிழகம் முழுவதும் சிறப்பு கொரோனா தடுப்பூசி முகாம்களை செப்.12ல் நடத்த தமிழக அரசு உத்தரவிட்டது. இதையடுத்து மாவட்ட நிர்வாகம் இதற்கான பணியில் முழு வீச்சில் ஈடுபட்டது.ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் சந்திரகலா தலைமையில் மாவட்டத்தில் 667 இடங்களில் 75 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி போட திட்டமிடப்பட்டது. நேற்று அனைத்து பகுதிகளிலும் தடுப்பூசி முகாம்கள் துவங்கியது.

இருந்த போதும், 70 சதவீதத்திற்கும் மேற்பட்ட முகாம்களில் தடுப்பூசி ஒதுக்கீடு குறைவாக இருந்தது. வந்திருந்த மக்களுக்கு தேவையானதடுப்பூசி இருப்பு இல்லாததால் ஏமாற்றத்துடன் மக்கள் திரும்பினர். திட்டமிட்டபடி ஒதுக்கீடு கிடைக்காததால் இந்த நிலை ஏற்பட்டது.குறிப்பாக கடலாடி ஒன்றியத்தில் 132 முகாம்களுக்கு 7500 தடுப்பூசிகள்வழங்க திட்டமிடப்பட்டது. ஆனால் 4500 தடுப்பூசிகளே ஒதுக்கப்பட்டன.

ஆப்பனுார், கடலாடி, ஏர்வாடி, இதம்பாடல், சிக்கல் உள்ளிட்ட 100க்கும் மேற்பட்ட முகாம்களில் மதியம் 12:30 மணிக்குள் தீர்ந்தன.அதன் பிறகும் ஏராளமான மக்கள் வந்தனர். அவர்களுக்கு கையிருப்பில் மருந்து இல்லாததால் ஏமாற்றத்துடன் திரும்பினர். இதேபோல் மாவட்டம்முழுவதும் பல இடங்களில் தடுப்பூசி பற்றாக்குறையால் மக்கள் ஏமாற்றமடைந்தனர்.

ராமநாதபுரம் சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர் குமரகுருபரனிடம் கேட்ட போது, கணக்கெடுப்பின் படி தமிழகத்தில் 36 லட்சம் பேருக்கு போட திட்டமிடப்பட்டது. ஆனால் மத்திய ஒதுக்கீட்டில் 20 லட்சம் தடுப்பூசி மட்டுமே வழங்கப்பட்டது. 36 லட்சம் ஒதுக்கீட்டு அடிப்படையில் ராமநாதபுரம் மாவட்டத்தில் 75 ஆயிரம் பேருக்கு திட்டமிடப்பட்டது. ஆனால் ஒதுக்கீடு திடீரெனகுறைக்கப்பட்டதால்49 ஆயிரம் ஊசிகள் மட்டுமே முகாம்களுக்கு ஒதுக்க முடிந்தது. இதனால் தான் மக்களுக்கு தடுப்பூசி பற்றாக்குறை, என்றார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X