பொது செய்தி

தமிழ்நாடு

ராமநாதபுரம், பரமக்குடியில் விநாயகர் சிலைகள் கரைப்பு

Added : செப் 12, 2021
Share
Advertisement
ராமநாதபுரம் : ராமநாதபுரத்தில் ஹிந்துமுன்னணி சார்பில் அமைக்கப்பட்ட விநாயகர் சிலைகள் நீர்நிலைகளில் கரைக்கப்பட்டது.ஹிந்து முன்னணி சார்பில் மாவட்டத்தில் 350 விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டன. நேற்று முன்தினம் ராமேஸ்வரம், தங்கச்சிமடம், பாம்பன், மண்டபம்உள்ளிட்ட பகுதிகளில் சிலைகள் கடல் மற்றும் நீர்நிலைகளில் கரைக்கப்பட்டன. நேற்று உச்சிப்புளி, ராமநாதபுரம்,

ராமநாதபுரம் : ராமநாதபுரத்தில் ஹிந்துமுன்னணி சார்பில் அமைக்கப்பட்ட விநாயகர் சிலைகள் நீர்நிலைகளில் கரைக்கப்பட்டது.

ஹிந்து முன்னணி சார்பில் மாவட்டத்தில் 350 விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டன. நேற்று முன்தினம் ராமேஸ்வரம், தங்கச்சிமடம், பாம்பன், மண்டபம்உள்ளிட்ட பகுதிகளில் சிலைகள் கடல் மற்றும் நீர்நிலைகளில் கரைக்கப்பட்டன. நேற்று உச்சிப்புளி, ராமநாதபுரம், பரமக்குடி, சாயல்குடி, திருப்புல்லாணி, ஏர்வாடி ஆகிய இடங்களில் அமைக்கப்பட்ட சிலைகள் நீர்நிலைகளில் கரைக்கப்பட்டன.

மாவட்ட பொதுச்செயலாளர் ராமமூர்த்தி தலைமையில், நகர் தலைவர் பாலமுருகன், நகர் செயலாளர் ஆதிபிரபு,நம்புராஜன், கார்த்திக், மண்டபம் ஒன்றிய பொறுப்பாளர் கார்த்திக் உட்பட பலர் பங்கேற்றனர். தாயுமானவர் சுவாமி கோயிலில் இருந்து நீலகண்டி ஊரணியில் சிலைகள் கரைக்கப்பட்டன.பரமக்குடி: பரமக்குடியில் ஹிந்து முன்னணி சார்பில் 48 இடங்களில் விநாயகர்சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு, வைகை ஆற்றில் விஜர்சனம் செய்யப்பட்டது.

பரமக்குடி ஈஸ்வரன் கோயில் தெரு, கொட்டாப்புளி தெரு, கிருஷ்ணா தியேட்டர், பங்களா ரோடு, உலகநாதபுரம், எமனேஸ்வரம் ஈஸ்வரன் கோயில் தெரு, ஆர்.எஸ்.எஸ்., காரியாலயம், மலையான் குடியிருப்பு உள்ளிட்ட 48 இடங்களில் சிலைகளை வைத்து தரிசனம் செய்தனர்.நேற்று காலை பல்வேறு இடங்களிலிருந்து விநாயகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்து வந்து சுந்தரராஜ பெருமாள் கோயில் முன்பு வைகை ஆற்றில் விஜர்சனம் செய்தனர். ஆற்றில் தண்ணீர் இல்லாததால் லாரிகளில் தண்ணீர் எடுத்து வரப்பட்டு விநாயகர் சிலைகள் கரைக்கப்பட்டது

மாவட்ட செயலாளர் வீரபாண்டியன் தலைமை வகித்தார். மாவட்ட பொருளாளர் ஆதித்தன், செயலாளர் சிவக்குமார், நகர் தலைவர் குமரன், திருமுருகன், தாமோதரன், கார்த்திக், குமார், ஜெகன், மாரி, புருஷோத்தமன் உள்ளிட்ட பலரும் பங்கேற்றனர்.கமுதி: பசும்பொன் கிராமத்தில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பிள்ளையார் கோயிலில் 7 அடி உயர விநாயகர் சிலை வைக்கப்பட்டு சிறப்பு பூஜை செய்யப்பட்டது.

முக்கிய வீதி வழியாக விநாயகர் சிலை ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு பசும்பொன் கண்மாய்அருகே கரைத்தனர். பா.ஜ., மாவட்ட பொருளாளர்கணபதி, ஒன்றிய பொது செயலாளர் ராமமூர்த்தி, மாவட்ட செயற்குழு சண்முகவேல் உட்பட கட்சி நிர்வாகிகள்,கிராமமக்கள் கலந்து கொண்டனர்.

வாலிநோக்கம்: விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு மேலமுந்தல் விநாயகர் கோயிலில் விநாயகர் சிலை வைக்கப்பட்டது. தீபாராதனைகளுக்குப் பிறகு நேற்று மாலை 5:00 மணி அளவில் கடலில் சிலை கரைக்கப்பட்டது. சாயல்குடி போலீசார், வாலிநோக்கம் கடலோரகுழும போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X