பொது செய்தி

தமிழ்நாடு

ராமேஸ்வரம் நண்டுக்கு மவுசு

Added : செப் 12, 2021
Share
Advertisement
ராமேஸ்வரம் : இந்தோனேசியாவில் மீன் வரத்து குறைந்ததால், ராமேஸ்வரம் இறால், நண்டு, மீனுக்கு கிராக்கி அதிகரித்து, விலையும் உயர்ந்தது.இலங்கை கடற்படை கெடுபிடியால் ராமேஸ்வரத்தில் குறைவான படகில் மீனவர்கள் மீன்பிடிக்க சென்றாலும், வலையில் சிக்கும் இறால், நண்டு,மீன் இரு மடங்கு விலை உயர்ந்துள்ளது. கடந்த சில மாதமாகஒரு கிலோ நண்டு ரூ.350ம், 2ம் தரம் இறால் ரூ.250க்கு விற்ற நிலையில்,

ராமேஸ்வரம் : இந்தோனேசியாவில் மீன் வரத்து குறைந்ததால், ராமேஸ்வரம் இறால், நண்டு, மீனுக்கு கிராக்கி அதிகரித்து, விலையும் உயர்ந்தது.

இலங்கை கடற்படை கெடுபிடியால் ராமேஸ்வரத்தில் குறைவான படகில் மீனவர்கள் மீன்பிடிக்க சென்றாலும், வலையில் சிக்கும் இறால், நண்டு,மீன் இரு மடங்கு விலை உயர்ந்துள்ளது. கடந்த சில மாதமாகஒரு கிலோ நண்டு ரூ.350ம், 2ம் தரம் இறால் ரூ.250க்கு விற்ற நிலையில், நேற்று ராமேஸ்வரத்தில் நண்டு ரூ.750க்கும், இறால் ரூ.350க்கும் வியாபாரிகள் வாங்கியதால் மீனவர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

இருப்பினும் எதிர்பார்த்த அளவுக்கு மீன்வரத்து இல்லையே என வேதனை அடைந்தனர்.இந்தோனேசியா, பிலிப்பைன்ஸ் கடலில்தட்பவெப்ப மாறுபாட்டால் அங்கு மீன் வரத்து குறைந்து, மீனுக்கு தட்டுப்பாடு நிலவுகிறது.இதனால் ராமேஸ்வரத்தில் நண்டு,இறாலுக்கு மவுசு அதிகமாகி விலையும் உயர்ந்ததாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X