தமிழ்நாடு

பயன்படுத்திய சமையல் எண்ணெய் திரும்ப வரணும்! உணவு பாதுகாப்புத்துறை கண்டிப்பு

Updated : செப் 13, 2021 | Added : செப் 12, 2021 | கருத்துகள் (4)
Share
Advertisement
கோவை;'ஓட்டல்கள், உணவு பண்டம் தயாரிப்பு நிறுவனங்கள் மட்டுமின்றி பள்ளி, கல்லுாரி விடுதிகள், கேன்டீன்களும், பயன்படுத்திய சமையல் எண்ணெயை, 'ரூகோ' கேன்களில் ஒப்படைக்க வேண்டும். தவறும் பட்சத்தில் கடும் நடவடிக்கை இருக்கும்' என்று உணவுப் பாதுகாப்புத்துறை எச்சரித்துள்ளது.சமையல் எண்ணெயை மீண்டும் மீண்டும் பயன்படுத்தி, தயார் செய்யப்படும் உணவு பண்டங்களால் மனித உடலுக்கு
 பயன்படுத்திய சமையல் எண்ணெய் திரும்ப வரணும்! உணவு பாதுகாப்புத்துறை கண்டிப்பு

கோவை;'ஓட்டல்கள், உணவு பண்டம் தயாரிப்பு நிறுவனங்கள் மட்டுமின்றி பள்ளி, கல்லுாரி விடுதிகள், கேன்டீன்களும், பயன்படுத்திய சமையல் எண்ணெயை, 'ரூகோ' கேன்களில் ஒப்படைக்க வேண்டும். தவறும் பட்சத்தில் கடும் நடவடிக்கை இருக்கும்' என்று உணவுப் பாதுகாப்புத்துறை எச்சரித்துள்ளது.சமையல் எண்ணெயை மீண்டும் மீண்டும் பயன்படுத்தி, தயார் செய்யப்படும் உணவு பண்டங்களால் மனித உடலுக்கு தீங்கு விளைகிறது. பு

ற்றுநோய் உள்ளிட்ட பாதிப்புகளும் ஏற்படுவதாக, மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.அதை தடுக்க, பயன்படுத்திய சமையல் எண்ணெயை வெளிமார்க்கெட்டில் மறுவிற்பனை செய்வது தடை செய்யப்பட்டுள்ளது. இந்த எண்ணெயை ஓட்டல்கள், பேக்கரிகளில் இருந்து உணவுப் பாதுகாப்புத்துறையே பெற்று, உயிரி எரிபொருளாக மாற்ற உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் ஏற்பாடு செய்துள்ளது.பயன்படுத்திய சமையல் எண்ணெய் சேகரிப்புக்காக, ஒவ்வொரு உணவு உற்பத்தி நிறுவனத்துக்கும், 'ரூகோ' என்ற பெயரில் கேன்கள் வழங்கப்படுகின்றன.

கோவையில் மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை ஆலோசனை கூட்டத்தில், 'ரூகோ' கேன் வினியோக பணியை, கலெக்டர் சமீரன் தொடங்கி வைத்தார்.அவர் கூறுகையில், ''உணவு தயாரிக்கும் நிறுவனங்கள், பேக்கரி உரிமையாளர்கள், பயன்படுத்திய எண்ணெயை அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்களிடம் ரூகோ கேன்களில் முறையாக ஒப்படைக்க வேண்டும். இது தொடர்பாக, உணவு பாதுகாப்புத்துறையினர் தொடர்ந்து கள ஆய்வு மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது,'' என்றார்.

உணவுப்பாதுகாப்புத்துறை நியமன அலுவலர் டாக்டர் தமிழ்செல்வன் கூறியதாவது:உணவு உற்பத்தி செய்வோர் வாங்கும் சமையல் எண்ணெய், பயன்படுத்தும் அளவு, ரூகோ கேன்களில் ஒப்படைக்கும் எண்ணெய் அளவு விபரங்கள் அவ்வப்போது கள ஆய்வுக்கு உட்படுத்தப்படும். ஓட்டல்கள், பேக்கரிகள், உணவு பண்டம் தயாரிப்போர் மட்டுமின்றி, பள்ளி, கல்லுாரிகளில் செயல்படும் விடுதிகள், கேன்டீன்களும், இந்த விதிமுறையை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும். பயன்படுத்திய சமையல் எண்ணெயை எக்காரணம் கொண்டும் மறு விற்பனை செய்யக்கூடாது. தவறினால் உணவு பாதுகாப்புத்துறையின் நடவடிக்கையை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.இவ்வாறு, தமிழ்செல்வன் தெரிவித்தார்.

Advertisement


வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
T.B.Sathiyanarayananan - Madurai.,இந்தியா
19-செப்-202116:11:33 IST Report Abuse
T.B.Sathiyanarayananan Let us welcome and give us full support to the Concerned officers.It is our duty. And moreover our health condition also should be saved.
Rate this:
Cancel
David DS - kayathar,இந்தியா
16-செப்-202122:06:40 IST Report Abuse
David DS சிறப்பான திட்டம், பார்ப்போம் பயன் இருக்கிறதா என்று
Rate this:
Cancel
David DS - kayathar,இந்தியா
16-செப்-202122:06:08 IST Report Abuse
David DS soopparappu
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X