பொது செய்தி

தமிழ்நாடு

கோவையில் 60 சதவீதம் பேருக்கு நோய் எதிர்ப்பு ஆற்றல்

Added : செப் 12, 2021
Share
Advertisement
கோவை:கோவை மாவட்டத்தில், நேற்று மெகா தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டது.வ.உ.சி., பூங்கா மைதானத்தில் தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து, மாவட்ட நிர்வாகம் ஏற்பாடு செய்திருந்த முகாமில் பொதுமக்களுக்கு கோவாக்சின், கோவிஷீல்டு இரண்டு தடுப்பூசிகளும் செலுத்தப்பட்டன. நோய் தடுப்பு வழிமுறைகள், முதலுதவி செய்தல், ரத்த தானம் பற்றியும் பொதுமக்களுக்கு நிபுணர்கள் ஆலோசனை வழங்கினர்.முகாமை
 கோவையில் 60 சதவீதம் பேருக்கு நோய் எதிர்ப்பு ஆற்றல்

கோவை:கோவை மாவட்டத்தில், நேற்று மெகா தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டது.வ.உ.சி., பூங்கா மைதானத்தில் தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து, மாவட்ட நிர்வாகம் ஏற்பாடு செய்திருந்த முகாமில் பொதுமக்களுக்கு கோவாக்சின், கோவிஷீல்டு இரண்டு தடுப்பூசிகளும் செலுத்தப்பட்டன. நோய் தடுப்பு வழிமுறைகள், முதலுதவி செய்தல், ரத்த தானம் பற்றியும் பொதுமக்களுக்கு நிபுணர்கள் ஆலோசனை வழங்கினர்.

முகாமை பார்வையிட்ட கலெக்டர் சமீரன், செய்தியாளர்களிடம் கூறியதாவது:மாவட்டத்தின் ஊரக பகுதிகளில் 1,200 இடங்கள், மாநகரில் 308 இடங்கள் என மெகா தடுப்பூசி முகாம் நடக்கிறது. காலை 10:00 மணி நிலவரப்படி 35 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.பகல் 1:00 மணி நிலவரப்படி 80,502 பேர் தடுப்பூசி போட்டுள்ளனர். மெகா முகாமில், மாநில அளவில் அதிக தடுப்பூசி போடுவதில் கோவை மாவட்டம் முன்னணியில் இருக்கிறது.வட மாநில தொழிலாளர்களுக்கு அவரவர் வேலை பார்க்கும் நிறுவனங்கள் மூலமாக, தடுப்பூசி போட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ரயில் நிலையத்தில் நடமாடும் முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன.

ஆதார் கார்டு வைத்திருக்கும் அனைவருக்கும் தடுப்பூசி போட தயாராக இருக்கிறோம்.மாவட்டத்தில் ஒரு மாதம் முன் நடத்தப்பட்ட ஆய்வில், 43 சதவீதம் பேருக்கு மட்டுமே கொரோனா நோய் எதிர்ப்பு ஆற்றல் இருப்பது தெரியவந்தது. தொடர்ந்து நடத்தப்படும் தடுப்பூசி முகாம்களின் விளைவாக, நோய் எதிர்ப்பு ஆற்றல் 60 சதவீதமாக அதிகரித்திருக்கும் என்று மாவட்ட நிர்வாகம் கருதுகிறது.மெகா முகாமில் ஒன்றரை லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.

அதை விட கூடுதலாக மக்கள் வருவர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.ஊரக பகுதிகளில் கூடுதலாக தடுப்பூசி தேவை என்ற கோரிக்கை தற்போது வந்துள்ளது. குறைவான தேவை இருக்கும் இடங்களில் இருந்து, அதிகமாக தேவைப்படும் இடங்களுக்கு தடுப்பூசியை கொண்டு செல்ல, உடனுக்குடன் ஏற்பாடு செய்யப்படுகிறது. தேவையை கருத்தில் கொண்டு, பிற மாவட்டங்களில் இருந்தும் கோவைக்கு தடுப்பூசி கேட்கப்பட்டுள்ளது.இவ்வாறு, கலெக்டர் தெரிவித்தார்.நிகழ்ச்சியில், மாநகராட்சி கமிஷனர் ராஜகோபால் மற்றும் அலுவலர்கள் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X