பொது செய்தி

இந்தியா

சூரிய மின்சக்தி விழிப்புணர்வு துணை ஜனாதிபதி வேண்டுகோள்

Added : செப் 12, 2021
Share
Advertisement
புதுச்சேரி-''கூரைகளில் சோலார் பேனல்களை நிறுவுவதால் ஏற்படும் நன்மைகள் குறித்து, மக்களிடம் அதிக விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்,'' என, துணை ஜனாதிபதிவெங்கையா நாயுடு பேசினார்.துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, மூன்று நாள் பயணமாக, சென்னையில் இருந்து ஹெலிகாப்டரில் நேற்று புதுச்சேரி வந்தார். லாஸ்பேட்டை ஏர்போர்ட்டில் கவர்னர் தமிழிசை, முதல்வர் ரங்கசாமி உட்பட பலர்
 சூரிய மின்சக்தி விழிப்புணர்வு துணை ஜனாதிபதி வேண்டுகோள்

புதுச்சேரி-''கூரைகளில் சோலார் பேனல்களை நிறுவுவதால் ஏற்படும் நன்மைகள் குறித்து, மக்களிடம் அதிக விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்,'' என, துணை ஜனாதிபதிவெங்கையா நாயுடு பேசினார்.

துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, மூன்று நாள் பயணமாக, சென்னையில் இருந்து ஹெலிகாப்டரில் நேற்று புதுச்சேரி வந்தார். லாஸ்பேட்டை ஏர்போர்ட்டில் கவர்னர் தமிழிசை, முதல்வர் ரங்கசாமி உட்பட பலர் வரவேற்றனர்.ஜிப்மரில் 7.67 கோடி ரூபாய் மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள சூரிய சக்தி மின் திட்டத்தை துவக்கி வைத்து, வெங்கையா நாயுடு பேசியதாவது:சூரிய மின் உற்பத்தி கூரை அமைக்க ஜிப்மர் வளாகத்தில் உள்ள 15 மருத்துவமனைகள் மற்றும் விடுதி கட்டடங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.

இந்த மின் ஆலை, ஜிப்மரின் 15 சதவீத மின் தேவையை பூர்த்தி செய்யும். இதன்மூலம், 1.5 மெகா வாட் சூரிய மின் சக்தி உற்பத்தி செய்யப்படும்.புதுப்பிக்கவல்ல எரிசக்தி பயன்படுத்துதலில், இந்தியா முன்னேற்றத்தில் உள்ளது. சூரிய ஒளி மின் உற்பத்தி சுற்றுச்சூழலுக்கு உகந்தது. கூரைகளில் சோலார் பேனல்களை நிறுவுவதால் ஏற்படும் நன்மைகள் குறித்து, மக்களிடம் அதிக விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.சூரிய சக்தி மின் திட்டத்திற்கு அரசு மானியம் தருகிறது. இதற்கான சாதனங்களை பொருத்த, முதலில் நிதி தேவைப்பட்டாலும், நீண்ட காலம் பயன் தரும். மின் கட்டணம் செலுத்தும் தேவை இருக்காது.இவ்வாறு, அவர் பேசினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X