பொது செய்தி

தமிழ்நாடு

விபத்தில் சிக்கி தேர்வுக்கு வந்த மாணவிக்கு போலீசார் 'மருந்து!'

Added : செப் 12, 2021
Share
Advertisement
கோவை;விபத்தில் சிக்கி காயங்களுடன் 'நீட்' தேர்வு எழுத வந்த மாணவிக்கு, போலீசாரும் சக பெற்றோரும் உதவிக்கரம் நீட்டியதால், அவரால் தேர்வு எழுத முடிந்தது. கோவை - பாலக்காடு சாலை குனியமுத்துாரிலுள்ள, கிருஷ்ணா தொழில் நுட்ப கல்லுாரியில் நேற்று நீட் தேர்வு நடந்தது. கோவை உடுமலையை சேர்ந்த மாணவி அனுஷயா தேர்வு எழுத வந்திருந்தார். முகத்தில் பேண்டேஜ் போடப்பட்டிருந்தது.தேர்வு
 விபத்தில் சிக்கி தேர்வுக்கு வந்த  மாணவிக்கு போலீசார் 'மருந்து!'

கோவை;விபத்தில் சிக்கி காயங்களுடன் 'நீட்' தேர்வு எழுத வந்த மாணவிக்கு, போலீசாரும் சக பெற்றோரும் உதவிக்கரம் நீட்டியதால், அவரால் தேர்வு எழுத முடிந்தது. கோவை - பாலக்காடு சாலை குனியமுத்துாரிலுள்ள, கிருஷ்ணா தொழில் நுட்ப கல்லுாரியில் நேற்று நீட் தேர்வு நடந்தது. கோவை உடுமலையை சேர்ந்த மாணவி அனுஷயா தேர்வு எழுத வந்திருந்தார். முகத்தில் பேண்டேஜ் போடப்பட்டிருந்தது.தேர்வு எழுதுவதற்கு உள்ளே சென்று ஆவணங்களை காண்பித்த அவர், சில நிமிடங்களில் திரும்ப அனுப்பப்பட்டார்.

பெற்றோர் கூடியிருந்த மரத்தடிக்கு திரும்பிய அவர், நீண்ட நேரம் யாரையோ தேடிக்கொண்டிருந்தார். அங்கிருந்த பெற்றோர் அவரிடம் விசாரித்தனர்.தான் சிறு விபத்தில் சிக்கியதாகவும், முகத்தில் காயங்கள் ஏற்பட்டதாகவும், விண்ணப்பத்தில் இணைக்கப்பட வேண்டிய பாஸ்போர்ட் சைஸ் போட்டோ தவறி விட்டதாகவும் கூறினார்.
இதைக்கேட்ட அங்கிருந்த உளவுபிரிவு போலீசார் தீபன்சக்கரவர்த்தி, போட்டோ பிரிண்ட் எடுப்பதற்கு ஏற்பாடு செய்தார். அதற்குள் அவரது சகோதரர் வந்துவிடவே, ஆவணங்கள் சரிபார்க்கப்பட்டு தேர்வு அறைக்குள் அனுமதிக்கப்பட்டார்.இதேபோல் ராகவி எனும் மற்றொரு மாணவி, தேர்வுக்கூட நுழைவுச்சீட்டின் மூன்றாவது பக்கத்தை பிரிண்ட் அவுட் எடுக்காமல் வந்திருந்தார். உளவு பிரிவு போலீசார் தீபன், கல்லுாரிக்கு வெளியே உள்ள இணையதள மையத்தில் அதற்கான ஏற்பாடுகளை செய்து, பிரிண்ட் அவுட் எடுத்துக்கொடுத்தார். அதனால் அவ்விரு மாணவியரும் தேர்வு எழுத முடிந்தது.தக்க சமயத்தில் உதவிய போலீசாரின் உதவியை, பெற்றோர் பாராட்டினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X