சம்பவம் செய்தி

தமிழ்நாடு

குடும்ப பிரச்னையில் தாய், மகன் தற்கொலை

Added : செப் 12, 2021
Share
Advertisement
தொண்டி-ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி அருகே குடும்ப பிரச்னையால் தாய், மகன் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டனர்.மதுரை மாவட்டம் பேரையூர் அருகே வையூர் கிராமத்தை சேர்ந்தவர் சின்னமுனியாண்டி 65. இவரது மனைவி மாரியம்மாள் 60, மகன் பாக்கியராஜ் 38. கட்டட வேலை பார்த்தனர். குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்னை காரணமாக தாயும், மகனும் தொண்டிக்கு வந்தனர். நேற்று முன்தினம் இரவு முறிசிலான்

தொண்டி-ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி அருகே குடும்ப பிரச்னையால் தாய், மகன் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டனர்.

மதுரை மாவட்டம் பேரையூர் அருகே வையூர் கிராமத்தை சேர்ந்தவர் சின்னமுனியாண்டி 65. இவரது மனைவி மாரியம்மாள் 60, மகன் பாக்கியராஜ் 38. கட்டட வேலை பார்த்தனர். குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்னை காரணமாக தாயும், மகனும் தொண்டிக்கு வந்தனர். நேற்று முன்தினம் இரவு முறிசிலான் தோப்பிற்கு சென்ற இருவரும் விஷம் குடித்தனர். நேற்று காலை அவ்வழியாக சென்றவர்கள் மாரியம்மாள் இறந்து கிடந்ததை பார்த்தனர்.

உயிருக்கு போராடிய பாக்கியராஜை தொண்டி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச்சென்றனர்.அவர் அங்கு இறந்தார். அவரின் பாக்கெட்டிலிருந்த கடிதத்தை தொண்டி போலீசார் கைப்பற்றினர்.போலீசார் கூறியதாவது:பாக்கியராஜின் தம்பி மனைவி நடத்தையை இருவரும் கண்டித்துள்ளனர். இதில் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் மனம் நொந்த தாய், மகன் இங்கு வந்து தற்கொலை செய்துள்ளனர், என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X