பொது செய்தி

தமிழ்நாடு

இன்றும், நாளையும் மழை பெய்ய வாய்ப்பு

Added : செப் 12, 2021
Share
Advertisement
கோவை:கோவை மாவட்டத்தில், இன்றும், நாளையும் இடி மின்னலுடன் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.மாவட்டத்தின் மலையடிவார பகுதிகளில் நேற்றும் மிதமான மழை பெய்தது. மாநகர பகுதிகளில் பகல் நேரத்தில் வெயிலும், மாலை வேளையில் மேகமூட்டமும் காணப்பட்டது. இன்றும், நாளையும் மாவட்டத்தில் இடி மின்னலுடன் மழைக்கு வாய்ப்புள்ளதாக, வானிலை மையம் தெரிவித்துள்ளது.

கோவை:கோவை மாவட்டத்தில், இன்றும், நாளையும் இடி மின்னலுடன் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.மாவட்டத்தின் மலையடிவார பகுதிகளில் நேற்றும் மிதமான மழை பெய்தது. மாநகர பகுதிகளில் பகல் நேரத்தில் வெயிலும், மாலை வேளையில் மேகமூட்டமும் காணப்பட்டது. இன்றும், நாளையும் மாவட்டத்தில் இடி மின்னலுடன் மழைக்கு வாய்ப்புள்ளதாக, வானிலை மையம் தெரிவித்துள்ளது. இந்தாண்டு சீசனில் நேற்று வரை, 902 மி.மீ., தென்மேற்கு பருவமழை மாவட்டத்தில் பெய்துள்ளது. இது, இந்த காலகட்டத்தில் இயல்பாக பெய்யும் மழையை காட்டிலும் 48 சதவீதம் அதிகம்.சிறுவாணி நிலவரம் சிறுவாணி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வருவதால், சில நாட்களாக அணைக்கு தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. தற்போது அணையின் மொத்த கொள்திறனில், 81 சதவீதம் அளவுக்கு தண்ணீர் தேங்கியுள்ளது. அணை நிரம்ப இன்னும் 10 அடி உயரத்துக்கு தண்ணீர் நிரம்ப வேண்டியுள்ளது. ஆற்றில் நீரோட்டம் பராமரிப்பதற்காக அணை மதகு, 5 செ.மீ., உயர்த்தப்பட்டுள்ளது. அணையில் இருந்து குடிநீர் வினியோகத்துக்காக தினமும் 10 கோடி லிட்டர் தண்ணீர் எடுக்கப்படுவதாக, அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X