பொது செய்தி

தமிழ்நாடு

'நீட்' பரீட்சை ஈசி; மாணவ, மாணவியர் மகிழ்ச்சி!

Added : செப் 12, 2021
Share
Advertisement
கோவை:கோவையில் நேற்று நடந்த 'நீட்' தேர்வில், இயற்பியல் பாட கேள்விகள் மட்டும் கடினமாக இருந்ததாக, மாணவ மாணவியர் தெரிவித்தனர்.எஸ்.ஜெயபிரியா, வாகராயம்பாளையம்: தமிழ் வழியில் தேர்வு எழுதினேன். தேர்வு மிகவும் எளிதாக இருந்தது. தமிழ் வழியில் எழுதியதால் எவ்வித கஷ்டமும் இல்லை. அனைத்து கேள்விகளும் எளிதாக இருந்தன. இயற்பியல் மட்டும் சற்று கடினமாக இருந்தது. எஸ்.கிருத்திகா,
 'நீட்' பரீட்சை ஈசி; மாணவ, மாணவியர் மகிழ்ச்சி!

கோவை:கோவையில் நேற்று நடந்த 'நீட்' தேர்வில், இயற்பியல் பாட கேள்விகள் மட்டும் கடினமாக இருந்ததாக, மாணவ மாணவியர் தெரிவித்தனர்.எஸ்.ஜெயபிரியா, வாகராயம்பாளையம்: தமிழ் வழியில் தேர்வு எழுதினேன். தேர்வு மிகவும் எளிதாக இருந்தது. தமிழ் வழியில் எழுதியதால் எவ்வித கஷ்டமும் இல்லை. அனைத்து கேள்விகளும் எளிதாக இருந்தன. இயற்பியல் மட்டும் சற்று கடினமாக இருந்தது. எஸ்.கிருத்திகா, குமரலிங்கம், உடுமலை: உயிரியல், வேதியியல் பாடங்களில் கேட்கப்பட்ட கேள்விகள் மிகவும் எளிதாக இருந்தன. இயற்பியலில் தான் சற்று கடினமான கேள்விகள் கேட்கப்பட்டிருந்தன. பொதுவாக தேர்வு மிகவும் எளிதாக இருந்தது.எஸ்.காவியதர்ஷினி, கருமத்தம்பட்டி: தேர்வு எளிதாக இருந்தது. 'பி' பிரிவில் கேட்கப்பட்டிருந்த கேள்விகள் அனைத்தும் எளிதாக இருந்தன. இயற்பியல் மட்டுமே கடினமாக இருந்தது. தேர்வு எழுத போதுமான பயிற்சி எடுத்ததால் கடினமாக இல்லை.ஜே.ரிஸ்வந்துஸ்லிமா, குமரலிங்கம், உடுமலை: ஆங்கில வழியில் தேர்வு எழுதினேன். கோச்சிங் சென்டர் சென்று பயிற்சி பெற்றேன். இயற்பியல் தவிர பிற பாடங்கள் அனைத்தும் எளிதாக இருந்தன. தேர்வு குறித்த கட்டுப்பாடுகள் ஏற்கனவே தெரிந்ததால் அதற்கேற்றாற்போல் தயாராகி விட்டோம்.எஸ்.பத்மஸ்ரீ, வாகராயம்பாளையம்: தமிழ் வழியில் தேர்வு எழுதினேன். இதனால், கேள்விகளை எளிதில் புரிந்து கொள்ள முடிந்தது. தேர்வு எளிமையாக இருந்தது. ஏ. மூணால்குமரன், ஒண்டிபுதுார்: பொதுவாக தேர்வு எளிதாகத்தான் இருந்தது. இயற்பியல் கேள்விகள்தான் மிகவும் கடினமாக இருந்தன. மற்றபடி, தேர்வு எதிர்பார்த்த அளவுக்கு கடினம் இல்லை.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X