அரசியல் செய்தி

தமிழ்நாடு

ஜாதியின் பெயரால் பிரிந்து கிடக்கும் ஹிந்துக்கள் : ஹிந்து முன்னேற்ற கழக தலைவர் பேச்சு

Added : செப் 12, 2021
Share
Advertisement
ராமநாதபுரம்--''ஜாதியின் பெயரால் ஹிந்துக்கள் பிரிந்து கிடக்கும் நிலை மாற வேண்டும்,, என ஹிந்து முன்னேற்ற கழக தலைவர் வக்கீல் கே.கோபிநாத் பேசினார்.ராமநாதபுரத்தில் நடந்த மாவட்ட ஹிந்து முன்னேற்ற கழக புதிய நிர்வாகிகள் அறிமுக கூட்டம் மற்றும் ஆலோசனை கூட்டத்தில் அவர் பேசியதாவது:பொதுவாக ஹிந்து அமைப்புகள் என்றாலே மதவாத அமைப்பு என்ற தவறான கருத்து உள்ளது. மதக்கலவரம்

ராமநாதபுரம்--''ஜாதியின் பெயரால் ஹிந்துக்கள் பிரிந்து கிடக்கும் நிலை மாற வேண்டும்,, என ஹிந்து முன்னேற்ற கழக தலைவர் வக்கீல் கே.கோபிநாத் பேசினார்.

ராமநாதபுரத்தில் நடந்த மாவட்ட ஹிந்து முன்னேற்ற கழக புதிய நிர்வாகிகள் அறிமுக கூட்டம் மற்றும் ஆலோசனை கூட்டத்தில் அவர் பேசியதாவது:பொதுவாக ஹிந்து அமைப்புகள் என்றாலே மதவாத அமைப்பு என்ற தவறான கருத்து உள்ளது. மதக்கலவரம் ஏற்படுத்துவார்கள் என்று தவறாக சித்தரிக்கின்றனர். பிற மதத்தவர்களை வழிநடத்த அவர்களுக்கென ஏராளமான தனி அமைப்புகள் உள்ளன.

அதுபோல் ஹிந்துக்களை வழிநடத்த ஏற்படுத்தப்பட்டது தான் ஹிந்து முன்னேற்ற கழகம். இஸ்லாமியர்களுக்கு 60க்கும் மேற்பட்ட நாடுகள் இருக்கிறது. கிறிஸ்தவர்களுக்கு 100க்கும் மேற்பட்ட நாடுகள் உள்ளன. ஹிந்துக்களுக்கு இருக்கும் ஒரே நாடு இந்தியாவை நாம் காப்பாற்ற வேண்டும்.ஜாதியால் ஹிந்துக்களை பிரித்தாளும் சூழ்ச்சியை செய்கின்றனர்.

தமிழகத்தில் ஜாதியை வைத்து அரசியல் செய்கின்ற தலைவர்கள் சிலர் உள்ளனர். பெண் கொடுத்து வாங்குவதற்கு மட்டும் ஜாதியை பயன்படுத்துங்கள். ஜாதியின் பெயரால் ஹிந்துக்கள் பிரிந்து கிடக்கும் நிலை மாற வேண்டும், என்றார்.மாநில பொதுச்செயலாளர் செந்தில்குமார், இளைஞர் அணி தலைவர் தாமோதரன், ராமநாதபுரம் மாவட்ட தலைவர் வெங்கடேஷ் உட்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X