பொது செய்தி

தமிழ்நாடு

சில வரி செய்தி :ஆதார் பதிவு திருத்த முகாம்

Added : செப் 12, 2021
Share
Advertisement
ஆதார் பதிவு திருத்த முகாம் கோவை பாப்பநாயக்கன்புதுார் பகுதியில், இந்திய அஞ்சல் துறை மற்றும் பி.என்.புதுார் கிளை கம்யூனிஸ்ட் கட்சி சார்பில், ஆதார் பதிவு மற்றும் திருத்த முகாம் நடைபெற்றது. இதில் பங்கேற்ற ஏ.ஐ.டி.யு.சி.,அமைப்பின் பொதுச்செயலாளர் தங்கவேலு கூறுகையில், ''ஆதார் அட்டையில் திருத்தம் செய்ய, தனியார் இ--சேவை மையங்களில் ஆயிரக்கணக்கில் பணத்தை கொடுத்து ஏமாற்றம்

ஆதார் பதிவு திருத்த முகாம் கோவை பாப்பநாயக்கன்புதுார் பகுதியில், இந்திய அஞ்சல் துறை மற்றும் பி.என்.புதுார் கிளை கம்யூனிஸ்ட் கட்சி சார்பில், ஆதார் பதிவு மற்றும் திருத்த முகாம் நடைபெற்றது. இதில் பங்கேற்ற ஏ.ஐ.டி.யு.சி.,அமைப்பின் பொதுச்செயலாளர் தங்கவேலு கூறுகையில், ''ஆதார் அட்டையில் திருத்தம் செய்ய, தனியார் இ--சேவை மையங்களில் ஆயிரக்கணக்கில் பணத்தை கொடுத்து ஏமாற்றம் அடைகின்றனர்,'' என்றார்.

பொறியாளர் மாற்றம்

தமிழ்நாடு வீட்டு வசதிவாரிய கோவை மண்டல நிர்வாக செயற் பொறியாளர் கரிகாலன் இடமாற்றம் செய்யப்பட்டார். அவருக்கு பதிலாக, நாகர்கோவிலை சேர்ந்த எட்வின் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் நாளை மறுதினம் பொறுப்பேற்கிறார்.ஆர்ப்பாட்டம்சுந்தராபுரம் அடுத்த காமராஜ் நகர் அருகேயுள்ள முனியப்பன் கோவில் வீதியில், அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பில், காஸ், பெட்ரோல், டீசல் விலை உயர்வு கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட குழு உறுப்பினர் ராணி தலைமையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில், காஸ் அடுப்பு, விறகுடன் பெண்கள், விலை உயர்வு கண்டித்து, மத்திய அரசுக்கு எதிராக கோஷமிட்டனர். கிளை தலைவர் சுதா, மாவட்ட துணை செயலாளர் சாந்தா உள்பட, 35 க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

குறை கேட்டார் எம்.எல்.ஏ.,

கோவை தெற்கு தொகுதி எம்.எல்.ஏ., வானதி சீனிவாசன் ரேஸ்கோர்ஸ் மற்றும் புலியகுளம் பகுதியிலுள்ள பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தார். புலியகுளம் அந்தோணியார் பள்ளியில் நடைபெற்ற கொரோனா தடுப்பூசி முகாமை பார்வையிட்டார். ராஜிவ்காந்திநகர் பகுதி மக்கள் சாக்கடை வசதி, தெருவிளக்கு வசதிகளை செய்து கொடுக்க வலியுறுத்தி புகார் கொடுத்தனர். புகாரை பெற்றுக்கொண்டு மாநகராட்சி அதிகாரிகளுக்கு பரிந்துரை செய்வதாக உறுதியளித்தார். ரேஸ்கோர்ஸ் நடைபாதையில் நடைபயிற்சி மேற்கொண்டவர்களிடம் குறைகளை கேட்டறிந்தார். கட்சி பிரமுகர்கள் உடன் சென்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X