27ல் நாடு தழுவிய பந்த் 1 லட்சம் பேர் பங்கேற்பு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

27ல் நாடு தழுவிய 'பந்த்' 1 லட்சம் பேர் பங்கேற்பு

Added : செப் 12, 2021
Share
பெரம்பலுார்-''பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, வரும் 27ம் தேதி நாடு தழுவிய பந்த் நடக்கிறது,'' என, தமிழக விவசாயிகள் சங்கத்தின் பொதுச் செயலர் சண்முகம் கூறினார். பெரம்பலுாரில் நேற்று அவர் கூறியதாவது:விவசாயிகளுக்கு விரோதமான மூன்று வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வேண்டும் என, சட்டசபையில் தமிழக அரசு தீர்மானம் நிறைவேற்றி இருப்பதை, தமிழக விவசாயிகள் சங்கம்

பெரம்பலுார்-''பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, வரும் 27ம் தேதி நாடு தழுவிய பந்த் நடக்கிறது,'' என, தமிழக விவசாயிகள் சங்கத்தின் பொதுச் செயலர் சண்முகம் கூறினார்.

பெரம்பலுாரில் நேற்று அவர் கூறியதாவது:விவசாயிகளுக்கு விரோதமான மூன்று வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வேண்டும் என, சட்டசபையில் தமிழக அரசு தீர்மானம் நிறைவேற்றி இருப்பதை, தமிழக விவசாயிகள் சங்கம் பாராட்டுகிறது.'மின்சார திருத்த சட்டம் - 2021ஐ திரும்ப பெற வேண்டும், விவசாய விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை நிர்ணயம் செய்வதற்கு, மத்திய அரசு சட்டம் கொண்டு வர வேண்டும்' உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, செப்., 27ல் நாடு தழுவிய வேலை நிறுத்தம் நடக்கிறது.

இந்த வேலை நிறுத்த போராட்டத்தின் போது, தமிழகத்தில், 5,000த்துக்கும் மேற்பட்ட இடங்களில் சாலை, ரயில் மறியல் போராட்டங்கள் நடைபெறும். இதில் ஒரு லட்சம் பேர் பங்கேற்க உள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X