பொது செய்தி

தமிழ்நாடு

மாநகராட்சி அதிகாரிகளுக்கு 'டபுள் டமாக்கா!'

Added : செப் 12, 2021
Share
Advertisement
கோவை:கோவை மாநகராட்சியில், குறிப்பிட்ட சில அதிகாரிகளுக்கு இரட்டை பதவி வழங்கப்பட்டுள்ளது; சிலர், வருவாயுள்ள பதவியை பெற்றிருப்பதால், சந்தோஷத்தில் திளைக்கின்றனர்.தமிழகத்தில் ஆட்சி மாற்றத்துக்கு பின், மாநகராட்சியில் பணிபுரியும் அதிகாரிகள், மாநகராட்சி எல்லைக்குள் மண்டலம் விட்டு மண்டலம் மாற்றப்பட்டு வருகின்றனர்.முதலில், அலுவல் பணியில் ஈடுபட்டிருந்த, 325 துாய்மை

கோவை:கோவை மாநகராட்சியில், குறிப்பிட்ட சில அதிகாரிகளுக்கு இரட்டை பதவி வழங்கப்பட்டுள்ளது; சிலர், வருவாயுள்ள பதவியை பெற்றிருப்பதால், சந்தோஷத்தில் திளைக்கின்றனர்.தமிழகத்தில் ஆட்சி மாற்றத்துக்கு பின், மாநகராட்சியில் பணிபுரியும் அதிகாரிகள், மாநகராட்சி எல்லைக்குள் மண்டலம் விட்டு மண்டலம் மாற்றப்பட்டு வருகின்றனர்.முதலில், அலுவல் பணியில் ஈடுபட்டிருந்த, 325 துாய்மை பணியாளர்கள் வார்டுக்கு அனுப்பப்பட்டனர். பின், கருணை அடிப்படையில் பணியில் சேர்ந்தவர்கள், அந்தந்த வார்டுகளுக்கு திருப்பி அனுப்பப்பட்டனர். அதோடு, தேர்ச்சி திறனற்ற பணியாளர்களும் வெவ்வேறு இடங்களுக்கு மாற்றப்பட்டனர்.அதன்பின், கண்காணிப்பாளர்கள்/ உதவி வருவாய் அலுவலர்கள் அனைவரும் மாற்றப்பட்டனர். அடுத்த கட்டமாக, உதவி கமிஷனர்கள் இட மாற்றம் செய்யப்பட்டனர். சுகாதார ஆய்வாளர்கள் மண்டலம் விட்டு மண்டலம் மாற்றப்பட்டனர். உதவி நிர்வாக பொறியாளர்கள், உதவி நகரமைப்பு அலுவலர்கள் மாற்றப்பட்டனர்.கடந்த அ.தி.மு.க., ஆட்சியில் குறிப்பிட்ட சில அதிகாரிகளுக்கு சீனியாரிட்டி இல்லாத போதிலும் விதிமுறையை மீறி, உயர் பதவி, கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. அதேபோன்ற தவறு, தற்போதும் நடக்க ஆரம்பித்திருக்கிறது.கண்காணிப்பாளர் கார்த்திகேயனுக்கு வருவாய் பிரிவு மற்றும் கணக்குப்பிரிவு என இரு துறைகள் ஒதுக்கப்பட்டு உள்ளன. மணி என்பவருக்கும் சுகாதாரப் பிரிவு மற்றும் பொறியியல் பிரிவு ஒதுக்கப்பட்டிருக்கிறது.வடக்கு மண்டல உதவி நிர்வாக பொறியாளர் செந்தில் பாஸ்கருக்கு, உதவி நகரமைப்பு அலுவலர் பொறுப்பும் கூடுதலாக வழங்கப்பட்டிருக்கிறது. மேற்கு மண்டல உதவி நகரமைப்பு அலுவலர் கலாவதிக்கு, பில்லுார் மூன்றாவது குடிநீர் திட்டத்துக்கு நிலம் கையகப்படுத்தும் வேலையும் சேர்த்து கொடுக்கப்பட்டிருக்கிறது. இதே போல், மத்திய மண்டல கண்காணிப்பாளர் செந்தில்குமாருக்கு, கூடுதலாக தெற்கு மண்டலமும் வழங்கப்பட்டிருக்கிறது.கடந்த அ.தி.மு.க., ஆட்சியில், உதவி பொறியாளர் கமலக்கண்ணனுக்கு முக்கிய பொறுப்பு வழங்கப்பட்டது. 'ஸ்மார்ட் சிட்டி' பணிகள் நடக்கும் வார்டுகள் தேர்வு செய்யப்பட்டு, அவருக்கு ஒதுக்கப்பட்டன.மேற்கு மண்டலம் - 22, 23, 24, மத்திய மண்டலம் 68, 71 ஆகிய ஐந்து வார்டுகள் கவனிக்கிறார். ஒரு உதவி பொறியாளருக்கு, இரு மண்டலங்களில் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பிறகும், எவ்வித மாற்றமும் செய்யப்படாமல், பணியில் தொடர்வது, மாநகராட்சி அலுவலர்கள் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.குறிப்பிட்ட சில அதிகாரிகளுக்கு இரட்டை பதவி வழங்குவதற்கு பதில், சீனியாரிட்டியில் காத்திருப்போருக்கு, அவர்களுக்கான பதவி உயர்வு வழங்க வேண்டும் என்கிற கோரிக்கை, மாநகராட்சி ஊழியர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X