நீட் தேர்வுக்கு பயந்து மாணவர் தற்கொலை முன்னாள் முதல்வர், அமைச்சர்கள் அஞ்சலி| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

'நீட்' தேர்வுக்கு பயந்து மாணவர் தற்கொலை முன்னாள் முதல்வர், அமைச்சர்கள் அஞ்சலி

Added : செப் 12, 2021 | கருத்துகள் (1)
Share
மேட்டூர்-'நீட்' தேர்வுக்கு பயந்து, மேட்டூர் அருகே மாணவர் தற்கொலை செய்து கொண்டார். அவரது உடலுக்கு முன்னாள் முதல்வர் மற்றும் தமிழக அமைச்சர்கள் அஞ்சலி செலுத்தினர்.சேலம் மாவட்டம் மேட்டூர் அடுத்த கூழையூர் கிராமத்தைச் சேர்ந்த சிவகுமார் - சிவஜோதி மகன் தனுஷ், 20. மேட்டூர் பா.ம.க., - எம்.எல்.ஏ., சதாசிவத்தின் உறவினர். மூன்றாவது முறைபிளஸ் 2 படித்துள்ள இவர், மருத்துவம் படிப்பதற்காக
 'நீட்' தேர்வுக்கு பயந்து மாணவர் தற்கொலை முன்னாள் முதல்வர், அமைச்சர்கள் அஞ்சலி

மேட்டூர்-'நீட்' தேர்வுக்கு பயந்து, மேட்டூர் அருகே மாணவர் தற்கொலை செய்து கொண்டார். அவரது உடலுக்கு முன்னாள் முதல்வர் மற்றும் தமிழக அமைச்சர்கள் அஞ்சலி செலுத்தினர்.

சேலம் மாவட்டம் மேட்டூர் அடுத்த கூழையூர் கிராமத்தைச் சேர்ந்த சிவகுமார் - சிவஜோதி மகன் தனுஷ், 20. மேட்டூர் பா.ம.க., - எம்.எல்.ஏ., சதாசிவத்தின் உறவினர். மூன்றாவது முறைபிளஸ் 2 படித்துள்ள இவர், மருத்துவம் படிப்பதற்காக ஏற்கனவே இரு முறை நீட் தேர்வு எழுதி தோல்வி அடைந்தார்.அதன்பின், ஜே.இ.இ., அக்ரி என பிற உயர்கல்வி பயில தேர்ச்சி பெற்ற போதிலும், அதில் சேராமல், மூன்றாவது முறை நீட் தேர்வு எழுத மும்முர மாக படித்தார்.மேச்சேரி காவிரி பாலிடெக்னிக் மையத்தில், தனுஷ் நேற்று நீட் தேர்வு எழுத இருந்தார்.நேற்று அதிகாலை 3:00 மணியளவில் வீட்டில் தனி அறையில் படித்து கொண்டிருந்த தனுஷ், திடீரென துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

நீட் தேர்வில் மூன்றாவது முறையும் தோல்வி அடைந்து விட்டால் என்ன செய்வது என்ற பயத்தில் தற்கொலை செய்து கொண்டதாக தெரிகிறது.தனுஷ் உடலுக்கு நேற்று மதியம், முன்னாள் முதல்வர் பழனிசாமி, முன்னாள் அமைச்சர் செம்மலை, எம்.பி., சந்திரசேகரன் ஆகியோர் மலர் வளையம்வைத்து அஞ்சலிசெலுத்தினர்.

ரூ.10 லட்சம் நிதிமதியம் 3:00 மணிக்கு, தி.மு.க., இளைஞரணி செயலர் உதயநிதி, அமைச்சர்கள் ரகுபதி, மெய்யநாதன், மகேஷ் உள்ளிட்டோர், தனுஷ் உடலுக்கு அஞ்சலி செலுத்தி, பெற்றோருக்கு ஆறுதல் கூறி, தி.மு.க., சார்பில் 10 லட்சம் ரூபாய் உதவித்தொகை வழங்கினர்.நேற்று மாலை, மாணவர் உடல் அவரது வீட்டின் பின்புறம் உள்ள நிலத்தில் அடக்கம் செய்யப்பட்டது.மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன், மொபைல் போனில் மாணவரின் பெற்றோரை தொடர்பு கொண்டு ஆறுதல் தெரிவித்தார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X