சாய்பாபா காலனியில் சாக்கடையால் சங்கடம்!

Added : செப் 12, 2021
Share
Advertisement
சாலையை சீரமைக்கணும்போத்தனுார் - வெள்ளலுார் ரோடு, ஜி.டி.டேங்க் அருகில், சாலை குண்டும் குழியுமாக உள்ளது. வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர். இச்சாலையை சீரமைக்க வேண்டும்.- சுரேஷ்குமார், போத்தனுார்.சாக்கடை கால்வாயை சீரமைக்கணும்சாய்பாபா காலனி, கே.கே.புதுார், குப்புசாமி வீதியில், சாக்கடை கால்வாய் சிதிலமடைந்து, கழிவுநீர் சாலைக்கு வருகிறது. இக்கால்வாயை சீரமைக்க வேண்டும்.-

சாலையை சீரமைக்கணும்போத்தனுார் - வெள்ளலுார் ரோடு, ஜி.டி.டேங்க் அருகில், சாலை குண்டும் குழியுமாக உள்ளது. வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர். இச்சாலையை சீரமைக்க வேண்டும்.- சுரேஷ்குமார், போத்தனுார்.

சாக்கடை கால்வாயை சீரமைக்கணும்சாய்பாபா காலனி, கே.கே.புதுார், குப்புசாமி வீதியில், சாக்கடை கால்வாய் சிதிலமடைந்து, கழிவுநீர் சாலைக்கு வருகிறது. இக்கால்வாயை சீரமைக்க வேண்டும்.- லட்சுமி, குப்புசாமி வீதி.

சாக்கடை கால்வாய் அடைப்புமாநகராட்சி, 65வது வார்டுக்கு உட்பட்ட, சவுரிபாளையம், டேங்க் ரோட்டில், சாக்கடை கால்வாய் அடைப்பால், கழிவுநீர் தேங்கியுள்ளது; துர்நாற்றம் வீசுகிறது. சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது.- நரசிம்மன், டேங்க் ரோடு.

நாய் தொல்லைசுந்தராபுரம் - மதுக்கரை மார்க்கெட் ரோடு, காமராஜ் நகர், எம்.ஜி.ஆர்., காலனி பகுதிகளில் தெரு நாய் தொல்லை அதிகரித்துள்ளது.- அருள், எம்.ஜி.ஆர்., நகர் விரிவு.

வீணாகிறது ரிசர்வ் சைட்மாநகராட்சி, 76வது வார்டுக்கு உட்பட்ட, தெலுங்குபாளையம், என்.இ.பி.கார்டன் பகுதியில், குழந்தைகள் விளையாட்டு மைதானத்துக்காக ஒதுக்கப்பட்ட, ரிசர்வ் சைட் செடி, முட்கள் வளர்ந்து, காடு போல் மாறி விட்டது. இந்த இடத்தை சுத்தப்படுத்தி, குழந்தைகளுக்கான விளையாட்டு திடல் அமைக்க வேண்டும்.- சேகர், என்.இ.பி.கார்டன்.

குப்பை தொட்டி வைக்கணும்சரவணம்பட்டி, கீரணத்தம், காந்திநகரில், சாலையோரம் குவிந்துள்ள குப்பை, அள்ளப்படாமல் உள்ளது. இங்குள்ள குப்பை தொட்டி, சிதிலமடைந்து பயனற்றுள்ளது. இங்கு புது குப்பை தொட்டி வைக்க வேண்டும். முறையாக குப்பையை அப்புறப்படுத்த வேண்டும்.- சூர்யா, காந்திநகர்.

குண்டும் குழியுமான ரோடுமேட்டுப்பாளையம் ரோடு, வெள்ளக்கிணர் பிரிவு - வெள்ளக்கிணர் ரோடு, குண்டும் குழியுமாக உள்ளது. வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர்.- பாலமுருகன், சரவணம்பட்டி.

விபத்து அபாயம்மாநகராட்சி, 44வது வார்டுக்கு உட்பட்ட, நல்லாம்பாளையம் ஆரம்பப் பள்ளி வளாகத்தில், சத்துணவு கூடம் அருகில் உள்ள, மரம் விழும் நிலையில் உள்ளது. விபத்து ஏற்படும் முன், இம்மரத்தை பாதுகாப்பாக அகற்ற வேண்டும்.- ராதாகிருஷ்ணன், நல்லாம்பாளையம்.

குப்பை அள்ளுவதில்லைஒண்டிப்புதுார், சவுடேஸ்வரி நகருக்கு, துாய்மை பணியாளர்கள் வராததால், சாலையோரம் குப்பை குவிந்துள்ளது.- வெங்கட், சவுடேஸ்வரி நகர்.

சாலையெல்லாம் குப்பைசூலுார், கலங்கல் ஊராட்சி மூன்றாவது வார்டுக்கு உட்பட்ட, அண்ணா நகரில், சாலையோரம் குவியும் குப்பை, முறையாக அப்புறப்படுத்தப்படுவதில்லை. இதனால், ரோடு முழுவதும் சிதறி கிடக்கிறது.- மணிகண்டன், அண்ணா நகர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X