தமிழ்நாடு

பசியுடன் 'நீட்' தேர்வெழுதிய மாணவர்கள்! ஏற்பாடுகளில் குளறுபடி; பெற்றோர் அதிருப்தி

Added : செப் 12, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
கோவை:விதிகள் இருந்தும், தேர்வு எழுதிய மாணவர்களுக்கு பிஸ்கட் கூட வழங்கப்படவில்லை.நாடு முழுவதும், நேற்று நீட் தேர்வு நடந்தது. தேர்வுக்கான அனைத்து ஏற்பாடுகளும் 'நேஷனல் டெஸ்டிங் ஏஜன்ஸி'(என்.டி.ஏ.,) சார்பில் மேற்கொள்ளப்பட்டன.கோவையில் ஏழு மையங்களில், 6,059 மாணவர்கள் தேர்வு எழுதினர். தேர்வு மதியம், 2:00 முதல் மாலை, 5:00 மணி வரை நடந்தது. இதற்காக மாணவர்கள் தேர்வு மையத்துக்குள், காலை, 11:00
 பசியுடன் 'நீட்' தேர்வெழுதிய மாணவர்கள்! ஏற்பாடுகளில் குளறுபடி; பெற்றோர் அதிருப்தி

கோவை:விதிகள் இருந்தும், தேர்வு எழுதிய மாணவர்களுக்கு பிஸ்கட் கூட வழங்கப்படவில்லை.நாடு முழுவதும், நேற்று நீட் தேர்வு நடந்தது. தேர்வுக்கான அனைத்து ஏற்பாடுகளும் 'நேஷனல் டெஸ்டிங் ஏஜன்ஸி'(என்.டி.ஏ.,) சார்பில் மேற்கொள்ளப்பட்டன.கோவையில் ஏழு மையங்களில், 6,059 மாணவர்கள் தேர்வு எழுதினர். தேர்வு மதியம், 2:00 முதல் மாலை, 5:00 மணி வரை நடந்தது. இதற்காக மாணவர்கள் தேர்வு மையத்துக்குள், காலை, 11:00 மணி முதல் அனுமதிக்கப்பட்டனர்.நீண்ட நேரத்துக்கு முன்னரே மாணவர்கள் தேர்வு மையத்துக்குள் சென்றதால், பிஸ்கட், குடிநீர் வழங்கப்பட வேண்டும் என, விதிகள் உள்ளன.ஆனால், நேற்று தேர்வு நடந்த பல மையங்களில், பிஸ்கட், குடிநீர் வழங்கப்படவில்லை. ஒரு சிலருக்கு மட்டும் கொடுத்து விட்டு மற்ற மாணவர்களை கைவிட்டது, தேர்வை நடத்திய 'நேஷனல் டெஸ்டிங் ஏஜன்ஸி' (என்.டி.ஏ.,). இதனால், பெற்றோர் கடும் அதிருப்திக்குள்ளாகினர். டோக்கன் வழங்கி மோசடிஇது ஒரு புறமிருக்க, ஈச்சனாரியில் உள்ள தனியார் கல்லுாரியில் நடந்த நீட் தேர்வில், வேறுவிதமான மோசடி நடந்துள்ளதாக, பெற்றோர் புலம்பித்தீர்த்தனர். மாணவர்கள் காலை, 11:00 மணிக்கே தேர்வு மையத்துக்குள் சென்றதால், மதிய வேளையில் பசியால் அவதிப்பட்டனர்.இந்நிலையில், மையத்துக்கு வெளியில் நின்றிருந்த பெற்றோர்கள் இருந்த பகுதிக்கு வந்த நபர் ஒருவர், போலீசார் அனுமதியுடன் உணவு டோக்கன்களை வினியோகம் செய்தார்.அதற்காக, ரூ.50 கட்டணம் வசூலிக்கப்பட்டது. டோக்கனை பெற்றவர்களிடம் இருந்து மாணவர்களின் பெயர் உள்ளிட்ட தகவல்களும் பெறப்பட்டன. தேர்வு மையத்துக்குள் சென்ற மாணவருக்கு இந்த டோக்கன் மூலம் உணவு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.இதனால் பெற்றோர் ஏராளமானோர், அந்த டோக்கன்களை போட்டி போட்டு வாங்கினர். தங்கள் பிள்ளைகள் உணவு உட்கொண்டு, தெம்பாக தேர்வு எழுதுவர் என நிம்மதியடைந்தனர்.மாலையில் தேர்வு முடிந்து சோர்வுடன் வந்த மாணவர்களிடம் விசாரித்தபோதுதான் தெரிந்தது, அவர்களுக்கு டோக்கன் உணவு மட்டுமல்ல, விதிமுறைபடி பிஸ்கட்டும் வழங்கவில்லை என்ற விஷயம். அதிர்ச்சியடைந்த பெற்றோர், இப்படியும் நுாதன மோசடி நடக்கிறதே என, புலம்பியபடி அங்கிருந்து நகர்ந்தனர். தேர்வு ஒருங்கிணைப்பாளர் நவ்ஜீவன் கூறுகையில், ''குடிநீர், பிஸ்கட் வழங்க மட்டுமே விதிகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்வு எழுதிய மாணவர்களுக்கு என்.டி.ஏ., சார்பில், பிஸ்கட் மற்றும் குடிநீர் வழங்கப்பட்டது. இதுதவிர, கல்லுாரிகளில் தேர்வு எழுதிய மாணவர்கள், அங்கிருந்த கேன்டீன்களில் தேவையான சிற்றுண்டி வாங்கி உட்கொண்டனர்,'' என்றார். ஒவ்வொரு முறையும் நீட் தேர்வின் போது, நடைபெறும் குளறுபடிகளுக்கு தீர்வு காணப்படுவதில்லை. அடுத்தமுறையாவது சுதாரிக்க வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
suresh kumar - Salmiyah,குவைத்
13-செப்-202113:54:47 IST Report Abuse
suresh kumar இந்த உணவு டோக்கன் பற்றி காவல் நிலையத்தில் யாரும் புகாரளிக்கவில்லையா?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X