பொது செய்தி

தமிழ்நாடு

வெங்கத்துார் ஏரியில் 1,250 பனை விதை நடவு

Added : செப் 12, 2021
Share
Advertisement
வெங்கத்துார் :வெங்கத்துார் ஏரியில் 1,250 பனை விதை நடும் பணி நடந்து வருகிறது. கடம்பத்துார் ஒன்றியம் வெங்கத்துார் ஊராட்சியில் அமைந்துள்ளது, பொதுப்பணித் துறை கட்டுப்பாட்டில் உள்ள வெங்கத்துார் ஏரி. 256 ஏக்கர் பரப்பு கொண்ட இந்த ஏரியை நம்பி 200 ஏக்கரில் விவசாயிகள் விவசாயம் செய்து வருகின்றனர்.இந்த ஏரியில் நீர் நிரம்பினால், அரண்வாயல் உபரி நீர் அரண்வாயல் வழியாக, செம்பரம்பாக்கம்
 வெங்கத்துார் ஏரியில் 1,250 பனை விதை நடவு

வெங்கத்துார் :வெங்கத்துார் ஏரியில் 1,250 பனை விதை நடும் பணி நடந்து வருகிறது. கடம்பத்துார் ஒன்றியம் வெங்கத்துார் ஊராட்சியில் அமைந்துள்ளது,

பொதுப்பணித் துறை கட்டுப்பாட்டில் உள்ள வெங்கத்துார் ஏரி. 256 ஏக்கர் பரப்பு கொண்ட இந்த ஏரியை நம்பி 200 ஏக்கரில் விவசாயிகள் விவசாயம் செய்து வருகின்றனர்.இந்த ஏரியில் நீர் நிரம்பினால், அரண்வாயல் உபரி நீர் அரண்வாயல் வழியாக, செம்பரம்பாக்கம் ஏரிக்கு செல்லும்.இந்த ஏரியில், மணவாள நகர் குடியிருப்போர் பொதுநலச் சங்கம் மற்றும் பொதுப்பணித் துறையினர் சார்பில், நேற்று முன்தினம் 1,250 பனை விதைகள் நடும் விழா துவங்கியது.விழாவில் பொதுப்பணித் துறை உதவி செயற்பொறியாளர் கார்த்திகேயன் தலைமையில், உதவி பொறியாளர் லோகரட்சகன் மற்றும் அதிகாரிகள் உட்பட பலர் பங்கேற்றனர்.மேலும், ஏரியில் கழிவு நீர் கலப்பதை தடுக்கவும், கரையை பலப்படுத்தவும், நீராதாரத்தை பாதுகாக்கவும், சீமை கருவேல மரங்களை அகற்றவும் நடவடிக்கை எடுக்கப்படும் என, பொதுப்பணித் துறையினர் தெரிவித்தனர்.

மாமல்லபுரம்இளந்தோப்பில், குடிநீர் உவர்ப்பு தன்மையை தவிர்க்க, பனை விதைப்புடன் நடவு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.மாமல்லபுரம் அடுத்த, பட்டிபுலம் ஊராட்சி இளந்தோப்பு பகுதி, மல்லை பசுமை சங்க சம்பத் உள்ளிட்ட ஆர்வலர்கள், பொதுமக்களிடம் பனை வளர்ப்பு பயன்கள் குறித்து விளக்கி, விழிப்புணர்வு ஏற்படுத்தி, சுற்றுப்புற பகுதிகளில் பனை விதைக்கின்றனர்.நீரின் உவர்ப்பை நீக்கி நன்னீராக மாற்றும் தன்மை பனைக்கு உள்ளதாக கருதப்படுவதால், கிணற்று பகுதியில் நேற்று பனை விதைக்கப்பட்டது. மாமல்லபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் நடராஜன், பனை விதைப்பை துவக்கி, 2,500 பனை விதைத்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X