பொது செய்தி

தமிழ்நாடு

சுற்றுலா பயணியர் வருகை எல்லையில் வாகன நெரிசல்

Added : செப் 12, 2021
Share
Advertisement
கூடலுார்- -நீலகிரிக்கு வரும் சுற்றுலா பயணியர் எண்ணிக்கை அதிகரித்ததால், தமிழக- - கர்நாடக எல்லையான கக்கனல்லாவில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.கடந்த மூன்று நாட்களாக தொடர் விடுமுறை காரணமாக, கர்நாடகாவில் இருந்து நீலகிரிக்கு சுற்றுலா பயணியர் வருகை அதிகரித்துள்ளது.தமிழக - கர்நாடகா எல்லையான, கக்கனல்லா சோதனை சாவடியில் பயணியரிடம் கொரோனா 'நெகட்டிவ் சான்று, இ - பாஸ்'

கூடலுார்- -நீலகிரிக்கு வரும் சுற்றுலா பயணியர் எண்ணிக்கை அதிகரித்ததால், தமிழக- - கர்நாடக எல்லையான கக்கனல்லாவில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

கடந்த மூன்று நாட்களாக தொடர் விடுமுறை காரணமாக, கர்நாடகாவில் இருந்து நீலகிரிக்கு சுற்றுலா பயணியர் வருகை அதிகரித்துள்ளது.தமிழக - கர்நாடகா எல்லையான, கக்கனல்லா சோதனை சாவடியில் பயணியரிடம் கொரோனா 'நெகட்டிவ் சான்று, இ - பாஸ்' சோதனை செய்த பின், அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.இதனால், எல்லையில் நீண்ட வரிசையில் வாகனங்கள் நிறுத்தப்பட்டு, கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

சுற்றுலா பயணியர் கூறுகையில், 'இங்கு சான்று சரிபார்ப்பு செய்ய நீண்ட நேரம் நிற்க வேண்டி உள்ளது. இதைத் தவிர்க்க, விடுமுறை நாட்களில் சோதனை பணியில் கூடுதல் ஊழியர்களை நியமிக்க வேண்டும்' என்றனர்.குடிநீருக்கு தவிப்புநீலகிரியின் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் நோக்கில், மாவட்ட நிர்வாகம் ஒருமுறை பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதித்தது. 5 லிட்டர் வரையிலான தண்ணீர், குளிர்பான பாட்டில்களுக்கு தடை விதிக்கப்பட்டது.

மாற்று ஏற்பாடாக, மாவட்டம் முழுதும் 68 இடங்களில் 1,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட வாட்டர் ஏ.டி.எம்., அமைக்கப்பட்டது. 5 ரூபாய் காயின் செலுத்தி, இதில் தண்ணீர் பிடித்துக் கொள்ள முடியும். கொரோனா காலத்தில் வாட்டர் ஏ.டி.எம்.,களை உள்ளாட்சி அமைப்புகள் பராமரிக்க போதிய கவனம் செலுத்தவில்லை. பல மாதங்கள் தண்ணீர் இருந்ததால், குடிநீர் மாசடைந்தும் உள்ளது. சுற்றுலா பயணியர் கூறுகையில், 'பாட்டிலில் தண்ணீர் விற்க தடை உள்ளதால், மிகவும் அவதிப்படுகிறோம். வாட்டர் ஏ.டி.எம்.,களை துாய்மைப்படுத்தி, சுத்திகரிக்கப்பட்ட தண்ணீரை வினியோகிக்க வேண்டும்' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X