பொது செய்தி

தமிழ்நாடு

ஏக்கருக்கு 1,150 கிலோ மகசூல் வேண்டுமா? ஏக்கருக்கு 1,150 கிலோ மகசூல் வேண்டுமா? கொண்டைக் கடலை சாகுபடிக்கு 'டிப்ஸ்'

Added : செப் 12, 2021
Share
Advertisement
கோவில்பாளையம்:ஒருங்கிணைந்த பயிர் நிர்வாகத்தால், கொண்டைக்கடலையில், அதிக மகசூல் பெறலாம்' என, வேளாண் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.சர்க்கார் சாமக்குளம் வட்டார வேளாண் உதவி இயக்குனர் நிர்மலா வெளியிட்டுள்ள அறிக்கை:ஒரு எக்டேருக்கு, 75 கிலோ, விதைக்க வேண்டும். செடிக்கு, செடி, 10 சென்டி மீட்டரும், பாருக்கு, பார், 30 சென்டி மீட்டரும் இடைவெளி விடவேண்டும். அரிசி கஞ்சியுடன் சேர்த்து,

கோவில்பாளையம்:ஒருங்கிணைந்த பயிர் நிர்வாகத்தால், கொண்டைக்கடலையில், அதிக மகசூல் பெறலாம்' என, வேளாண் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.சர்க்கார் சாமக்குளம் வட்டார வேளாண் உதவி இயக்குனர் நிர்மலா வெளியிட்டுள்ள அறிக்கை:ஒரு எக்டேருக்கு, 75 கிலோ, விதைக்க வேண்டும். செடிக்கு, செடி, 10 சென்டி மீட்டரும், பாருக்கு, பார், 30 சென்டி மீட்டரும் இடைவெளி விடவேண்டும். அரிசி கஞ்சியுடன் சேர்த்து, நேர்த்தி செய்தபின் விதைக்க வேண்டும். நிலத்தை நான்கு முறை புழுதிபட உழ வேண்டும். பயிரின் வளர்ச்சியை பொறுத்து, பூக்கும் தருணம் மற்றும் காய்க்கும் தருணத்தில் நீர் பாய்ச்ச வேண்டும். நிலத்தில் நீர் தேங்கக்கூடாது; செடிகள் அழுகும் அபாயம் உள்ளது.பூக்கும் மற்றும் காய்க்கும் தருணத்தில் டி.ஏ.பி.,யை நீரில் கலந்து தெளிக்க வேண்டும். வேர் அழுகல், கழுத்துப்பட்டை அழுகல், வாடல் நோய் ஆகியவற்றைக் கட்டுப்படுத்த, பூஞ்சானக் கொல்லி தெளிக்க வேண்டும். விதைத்த 90 நாட்களில், காய்கள் முற்றிய பின் அறுவடை செய்ய வேண்டும். ஒருங்கிணைந்த பயிர் நிர்வாகத்தால், ஏக்கருக்கு, 1,000 முதல் 1,150 கிலோ வரை மகசூல் பெறலாம். இவ்வாறு, அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X