சம்பவம் செய்தி

தமிழ்நாடு

விசாரிக்க சென்ற ஏட்டு விழுந்தது அரிவாள் வெட்டு

Added : செப் 12, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
ஈரோடு-ஈரோட்டில், 'டாஸ்மாக்' கடையில் விசாரிக்க சென்ற போலீஸ் ஏட்டை, இளநீர் வியாபாரி அரிவாளால் வெட்டியது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.ஈரோட்டில், பவானி சாலையில் சுண்ணாம்பு ஓடை பகுதியில், டாஸ்மாக் கடை செயல்படுகிறது. தண்ணீர் பந்தல்பாளையத்தைச் சேர்ந்த இளநீர் வியாபாரி முருகன், 45, நேற்று மதியம் மது வாங்க சென்றார். கடன் கேட்டு தகராறு செய்யவே, கருங்கல்பாளையம் போலீசாருக்கு
 விசாரிக்க சென்ற ஏட்டு விழுந்தது அரிவாள் வெட்டு

ஈரோடு-ஈரோட்டில், 'டாஸ்மாக்' கடையில் விசாரிக்க சென்ற போலீஸ் ஏட்டை, இளநீர் வியாபாரி அரிவாளால் வெட்டியது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

ஈரோட்டில், பவானி சாலையில் சுண்ணாம்பு ஓடை பகுதியில், டாஸ்மாக் கடை செயல்படுகிறது. தண்ணீர் பந்தல்பாளையத்தைச் சேர்ந்த இளநீர் வியாபாரி முருகன், 45, நேற்று மதியம் மது வாங்க சென்றார். கடன் கேட்டு தகராறு செய்யவே, கருங்கல்பாளையம் போலீசாருக்கு ஊழியர்கள் தகவல் தெரிவித்தனர்.பணியில் இருந்த ஏட்டு ராஜு, 44, கடைக்கு சென்று விசாரித்தார். அப்போது, முருகன் மறைத்து வைத்திருந்த இளநீர் வெட்டும் அரிவாளால், ஏட்டை வெட்டினார்.

வலது மார்பு, வலது கையில் வெட்டு விழுந்து, ராஜு துடித்தார்.ரத்தம் கொட்டிய நிலையில் ஆம்புலன்சில், தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.முருகனை அங்கிருந்தவர்கள் பிடித்து, கை, கால்களை கட்டி போட்டனர். கருங்கல்பாளையம் போலீசார் வந்து, முருகனை ஸ்டேஷனுக்கு அள்ளிச் சென்றனர்.சிகிச்சைக்கு பின், ஏட்டு உடல்நிலை சீராக இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
jayvee - chennai,இந்தியா
14-செப்-202112:25:02 IST Report Abuse
jayvee கல்வி மற்றும் மருத்துவத்தை மட்டும் இலவசமாக கொடுத்துவிட்டு மற்ற ஊதாரித்தனமான இலவசங்கள் மற்றும் கடன் தள்ளுபடிகளை நிறுத்தினால் டாஸ்மாகே தேவைப்படாது .. இழுத்து மூடிவிடலாம்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X