சம்பவம் செய்தி

தமிழ்நாடு

வாலிபர் கொலை தந்தை, தம்பி கைது

Added : செப் 12, 2021
Share
Advertisement
பொள்ளாச்சி-கோவை மாவட்டம் பொள்ளாச்சி, ஜமீன் ஊத்துக்குளி அருகே, 10ம் தேதி பாலத்தின் கீழ், பலத்த காயத்துடன் ஒரு வாலிபர் கிடந்தார். பொள்ளாச்சி மேற்கு போலீசார் மீட்டு, கோவை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.விசாரணையில், குஞ்சிபாளையத்தைச் சேர்ந்த செந்தில்குமார், 20, என தெரிந்தது. நேற்று முன்தினம் அவர் இறந்தார். இது தொடர்பாக, அவரது தந்தை கதிர்வேல், 50, மற்றும் 16 வயது சகோதரர் கைது

பொள்ளாச்சி-கோவை மாவட்டம் பொள்ளாச்சி, ஜமீன் ஊத்துக்குளி அருகே, 10ம் தேதி பாலத்தின் கீழ், பலத்த காயத்துடன் ஒரு வாலிபர் கிடந்தார்.

பொள்ளாச்சி மேற்கு போலீசார் மீட்டு, கோவை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.விசாரணையில், குஞ்சிபாளையத்தைச் சேர்ந்த செந்தில்குமார், 20, என தெரிந்தது. நேற்று முன்தினம் அவர் இறந்தார். இது தொடர்பாக, அவரது தந்தை கதிர்வேல், 50, மற்றும் 16 வயது சகோதரர் கைது செய்யப்பட்டனர்.

போலீசார் கூறுகையில், 'மது போதையில் வந்த செந்தில்குமார், வீட்டில் தகராறில் ஈடுபட்டுள்ளார். 'ஆவேசமடைந்த தம்பி, கட்டையால் தாக்கியதில் மயங்கி விழுந்த செந்தில்குமாரை, துாக்கி சென்று பாலத்தின் கீழ் போட்டு நாடகம் ஆடியுள்ளனர். சந்தேகமடைந்து விசாரித்தபோது உண்மை தெரிந்தது. இருவரையும் கைது செய்து விசாரிக்கிறோம்' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X