சம்பவம் செய்தி

தமிழ்நாடு

தாய்க்கு 3வது தடுப்பூசி மகன் புகாரால் பரபரப்பு

Added : செப் 12, 2021
Share
Advertisement
திண்டிவனம்-தன் தாய்க்கு மூன்றாவது முறையாக கொரோனா தடுப்பூசி போடப்பட்டதாக அவரது மகன், கலெக்டரிடம் புகார் தெரிவித்ததால் பரபரப்பு நிலவியது.விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் நகராட்சி வளாகத்தில், நேற்று காலை கொரோனா தடுப்பூசி மெஹா முகாம் நடந்தது. அப்போது, திண்டிவனம் அடுத்த விட்டலாபுரத்தைச் சேர்ந்த விவசாயி சிவகுமார், 48, தன் தாய் கண்ணம்மா, 70, உடன் வந்தார். அங்கிருந்த மருத்துவ

திண்டிவனம்-தன் தாய்க்கு மூன்றாவது முறையாக கொரோனா தடுப்பூசி போடப்பட்டதாக அவரது மகன், கலெக்டரிடம் புகார் தெரிவித்ததால் பரபரப்பு நிலவியது.

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் நகராட்சி வளாகத்தில், நேற்று காலை கொரோனா தடுப்பூசி மெஹா முகாம் நடந்தது. அப்போது, திண்டிவனம் அடுத்த விட்டலாபுரத்தைச் சேர்ந்த விவசாயி சிவகுமார், 48, தன் தாய் கண்ணம்மா, 70, உடன் வந்தார். அங்கிருந்த மருத்துவ ஊழியர்களிடம், 'என் தாய்க்கு விட்டலாபுரத்தில் காலை நடந்த சிறப்பு முகாமில் மூன்றாவது முறையாக கொரோனா தடுப்பூசி போட்டுள்ளனர். 'இதனால், அவரது உடல் நலத்திற்கு ஏதேனும் பாதிப்பு ஏற்படுமா' எனக் கேட்டார். முகாமிற்கு வந்த கலெக்டர் மோகனிடமும் முறையிட்டார்.சிவகுமார் கூறியதாவது:ஏற்கனவே என் தாய்க்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இரண்டாவது தடுப்பூசி, நான்கு நாட்களுக்கு முன் ஏரி பராமரிப்பு வேலையின்போது போடப்பட்டது.

நேற்று காலை நான் நிலத்திற்கு சென்றிருந்த நேரத்தில், என் தாய்க்கு உடல்நிலை சரியில்லாததால், பொது இலவச மருத்துவ முகாம் என நினைத்து விட்டலாபுரத்தில் நடந்த கொரோனா தடுப்பூசி மெஹா முகாமிற்கு சென்றுள்ளார்.அங்கு பணியில் இருந்த ஊழியர்கள், ஏற்கனவே அவர் தடுப்பூசி போட்டுள்ளாரா என்ற விபரத்தைக் கேட்காமல், அவருக்கு மூன்றாவது முறையாக தடுப்பூசி போட்டுள்ளனர். கலெக்டரிடம் கூறியபோது, மருத்துவரிடம் கூறும்படி தெரிவித்து சென்று விட்டார்.மருத்துவரிடம் கேட்டபோது, அவரது மொபைல் எண்ணைக் கொடுத்து, ஏதாவது பிரச்னை என்றால் போன் செய்யும்படி கூறியுள்ளார்.இவ்வாறு அவர் கூறினார்.இதனால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X