சம்பவம் செய்தி

தமிழ்நாடு

சட்டவிரோதமாக லாரிகளில் மண் கடத்தல்

Added : செப் 12, 2021
Share
Advertisement
மேட்டுப்பாளையம்:காரமடை அருகே, லாரிகளில் லோடு, லோடாய் ஏராளமான மண் கடத்தப்படுகிறது. நடவடிக்கை எடுக்க வேண்டிய வருவாய்த்துறையினர், வேடிக்கை பார்ப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.காரமடை அருகே கிட்டாம்பாளையத்தில், தனியாருக்கு சொந்தமான, 47 ஏக்கர் நிலம் உள்ளது. இந்த நிலத்தில் லே-அவுட் போடும் பணிகள் நடைபெறுகின்றன.இந்த நிலத்தை சமன் செய்வதற்காக பொக்லைன், ஹிட்டாச்சி
 சட்டவிரோதமாக லாரிகளில் மண் கடத்தல்

மேட்டுப்பாளையம்:காரமடை அருகே, லாரிகளில் லோடு, லோடாய் ஏராளமான மண் கடத்தப்படுகிறது. நடவடிக்கை எடுக்க வேண்டிய வருவாய்த்துறையினர், வேடிக்கை பார்ப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.காரமடை அருகே கிட்டாம்பாளையத்தில், தனியாருக்கு சொந்தமான, 47 ஏக்கர் நிலம் உள்ளது. இந்த நிலத்தில் லே-அவுட் போடும் பணிகள் நடைபெறுகின்றன.இந்த நிலத்தை சமன் செய்வதற்காக பொக்லைன், ஹிட்டாச்சி இயந்திரங்கள் வாயிலாக, மேடான பகுதியில் உள்ள மண்ணை, தோண்டி அள்ளும் பணிகள் நடைபெறுகின்றன. இவ்வாறு, எடுக்கப்படும் மண், கீரணத்தத்திற்கு, லாரிகளில் கடத்தப்படுகிறது.இங்கு மண் எடுத்து, லாரிகளில் காரமடை வழியாக, வெளியிடங்களுக்கு கொண்டு செல்வதற்கு, வருவாய்த் துறையிடம் முறையான அனுமதி பெறவில்லை எனக் கூறப்படுகிறது. சட்டவிரோதமாக, அனுமதியின்றி, லாரிகளில் மண் எடுத்துச் செல்வதால், அரசுக்கு கிடைக்க வேண்டிய பல ஆயிரம் ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. ஒரு வாரமாக நடைபெறும், மண் கடத்தலை தடுக்க வேண்டிய மேட்டுப்பாளையம் தாசில்தார் மற்றும் வருவாய் துறை அதிகாரிகள், முறையான நடவடிக்கை எடுக்காமல் உள்ளனர்.இதுகுறித்து மேட்டுப்பாளையம் தாசில்தார் ஷர்மிளாவிடம் கேட்டபோது,"லாரிகளில் மண் கடத்தல் குறித்து தகவல் வந்தது. உடனடியாக வருவாய் ஆய்வாளர், கிராம நிர்வாக அலுவலர் ஆகியோரை அனுப்பி ஆய்வு செய்யும்படி அறிவுறுத்தப்பட்டது. மேலும் மண்ணுடன் செல்லும் லாரிகளை பிடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது" என்றார்.குற்றச்சாட்டுதடாகம் பள்ளத்தாக்கு பகுதியில், செங்கல் சூளைகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால், காரமடை சுற்றுப்பகுதிகளில் செங்கல்சூளைகள் புற்றீசலாய் முளைத்துள்ளன. காரமடையில் தொடர்ந்து கனிமவளம் தொடர்பான புகார்கள் அதிகரித்து வந்தாலும், வருவாய்த்துறையோ, கனிமவளத்துறையோ உரிய நடவடிக்கை எடுப்பதாக இல்லை, என, சூழலியல் ஆர்வலர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X