பொது செய்தி

தமிழ்நாடு

வாணியம்பாடி பிரமுகர் கொலை தப்பியவர்களை பிடிக்க 4 தனிப்படை

Added : செப் 12, 2021
Share
Advertisement
வாணியம்பாடி-''வசீம் அக்ரமை கொலை செய்து, தப்பியோடியவர்களை பிடிக்க நான்கு தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன,'' என, டி.ஐ.ஜி., பாபு கூறினார்.திருப்பத்துார் மாவட்டம் வாணியம்பாடி ஜீவா நகரைச் சேர்ந்தவர் வசீம் அக்ரம், 40; மனித நேய ஜனநாயக கட்சி மாநில துணைச் செயலர். இவர் 10ம் தேதி இரவு 7:30 மணிக்கு தலை துண்டித்து படுகொலை செய்யப்பட்டார்.வேலுார் சரக டி.ஐ.ஜி., பாபு நேற்று சம்பவ இடத்தை

வாணியம்பாடி-''வசீம் அக்ரமை கொலை செய்து, தப்பியோடியவர்களை பிடிக்க நான்கு தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன,'' என, டி.ஐ.ஜி., பாபு கூறினார்.

திருப்பத்துார் மாவட்டம் வாணியம்பாடி ஜீவா நகரைச் சேர்ந்தவர் வசீம் அக்ரம், 40; மனித நேய ஜனநாயக கட்சி மாநில துணைச் செயலர். இவர் 10ம் தேதி இரவு 7:30 மணிக்கு தலை துண்டித்து படுகொலை செய்யப்பட்டார்.வேலுார் சரக டி.ஐ.ஜி., பாபு நேற்று சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணை நடத்தினார்.

அப்போது அவர் கூறியதாவது:வாணியம்பாடி ஜீவா நகரைச் சேர்ந்த கஞ்சா வியாபாரி இம்தியாஸ். ஜூலை 26ல் இவரது வீட்டில் இருந்து 8 கிலோ கஞ்சா, 10 பட்டா கத்திகள், 10 மொபைல் போன்கள் பறிமுதல் செய்யப்பட்டு, மூன்று பேரை போலீசார் கைது செய்தனர்.வசீம் அக்ரம் தன்னை காட்டி கொடுத்ததாக இம்தியாஸ் கருதினார். இருவருக்கும் முன்விரோதம் இருந்தது. இதையடுத்து, இம்தியாஸ் கூலிப்படையை ஏவி, வசீம் அக்ரமை கொலை செய்துள்ளார்.சென்னை, வண்டலுாரைச் சேர்ந்த ரவி, தில்லிகுமார் ஆகியோரை கைது செய்துள்ளோம். காஞ்சிபுரம் எஸ்.பி., சுதாகர் தலைமையில் நான்கு தனிப்படை அமைத்து, தப்பியோடிய கொலையாளிகளை தேடி வருகிறோம்.இவ்வாறு அவர் கூறினார்.பிரேத பரிசோதனைக்கு பின், வசீம் அக்ரம் உடல் நேற்று முன்தினம் மாலை, அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது. எம்.எல்.ஏ.,க்கள் செந்தில்குமார், தேவராஜ், அப்துல் சமது, முன்னாள் அமைச்சர் நிலோபர் கபில் ஆகியோர் அஞ்சலி செலுத்தினர். பின், உடல் அடக்கம் நடந்தது.நிவாரணம் வழங்க தமிமுன் அன்சாரி கோரிக்கைமனித நேய ஜனநாயக கட்சியின் பொதுச் செயலர் தமிமுன் அன்சாரி, நேற்று வசீம் அக்ரம் வீட்டிற்கு சென்று குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.

பின், அவர் கூறியதாவது:சமூக விரோத செயல்களுக்கு எதிராக செயல்பட்டதால், வசீம் அக்ரம் படுகொலை செய்யப்பட்டார். கொலை செய்யப்பட்ட காட்சிகள், கண்காணிப்பு கேமராவில் பதிவாகி சமூக வலைதளங்களில் பரவியதை பார்க்கும் போது, இந்த கோர சம்பவத்தை சகஜமாக எடுத்துக் கொள்ள முடியவில்லை. குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய வேண்டும். வசீம் அக்ரம் குடும்பத்தினருக்கு தமிழக அரசு 20 லட்சம் ரூபாய் கருணைத்தொகை வழங்க வேண்டும். அவரது மனைவிக்கு, கல்வித் தகுதி அடிப்படையில் அரசு வேலை வழங்க வேண்டும்.இந்த வழக்கை ஒரு கண் துடைப்பாக இருக்காமல், கூலிப்படை சென்னையில் எப்படி இயங்குகிறது என்பதை கண்டறிந்து, முழுமையாக ஒழிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X