பொது செய்தி

தமிழ்நாடு

அரை நுாற்றாண்டுக்கு பின் வந்தது பஸ்

Added : செப் 12, 2021
Share
Advertisement
அன்னுார்:பிள்ளையப்பம்பாளையம் ஊராட்சியில், தொட்டியனுாரில் 1,100 பேரும், அருகிலுள்ள வேலாயுதம்பாளையத்தில், 400 பேரும் வசிக்கின்றனர்.இங்கு, ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி மற்றும் ரேஷன் கடை உள்ளது. எனினும், எங்கு செல்லவும் பஸ் வசதி இல்லை.இந்த ஊருக்கு பஸ் இயக்கும்படி, பொதுமக்கள் மற்றும் ஊராட்சி சார்பில், 50 ஆண்டுகளாக கோரி வந்தனர். இந்நிலையில் இரு வாரங்களுக்கு முன் அரசு
 அரை நுாற்றாண்டுக்கு பின் வந்தது பஸ்

அன்னுார்:பிள்ளையப்பம்பாளையம் ஊராட்சியில், தொட்டியனுாரில் 1,100 பேரும், அருகிலுள்ள வேலாயுதம்பாளையத்தில், 400 பேரும் வசிக்கின்றனர்.இங்கு, ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி மற்றும் ரேஷன் கடை உள்ளது. எனினும், எங்கு செல்லவும் பஸ் வசதி இல்லை.இந்த ஊருக்கு பஸ் இயக்கும்படி, பொதுமக்கள் மற்றும் ஊராட்சி சார்பில், 50 ஆண்டுகளாக கோரி வந்தனர். இந்நிலையில் இரு வாரங்களுக்கு முன் அரசு போக்குவரத்து கழக அதிகாரிகள், தென்னம்பாளையம் ரோட்டில் இருந்து, தொட்டியனுார் செல்லும் பாதையை ஆய்வுசெய்தனர். அங்கு பாதையின் இருபுறமும் இருந்த முள் செடிகளை அகற்றி பாதையை சீர் அமைத்துத் தரும்படி ஊராட்சியிடம் கூறினர். இதையடுத்து ஊராட்சி சார்பில் பாதை சரி செய்யப்பட்டது. நேற்று அன்னுாரில் இருந்து குமாரபாளையம், ஆலாம்பாளையம் வழியாக, தொட்டியனுாருக்கு பஸ் இயக்கப்பட்டது. இந்த பஸ் 6:45 மணிக்கு அன்னுாரில் இருந்து புறப்பட்டு தொட்டியனுார் வழியாக வாகராயம்பாளையம் சென்று, மீண்டும் அதே வழியாக அன்னுார் வருகிறது. மாலை நாலரை மணிக்கும் இதேபோல் இயங்குகிறது. நேற்று நடந்த பஸ் வழித்தட துவக்க விழாவில், ஊராட்சித் தலைவர் லட்சுமண மூர்த்தி தலைமை வகித்தார். ஒன்றிய துணைச் சேர்மன் சத்தியமூர்த்தி, அரசு போக்குவரத்து கழக நிர்வாக இயக்குனர் ஆறுமுகம் ஆகியோர் கொடியசைத்து, புதிய வழித்தடத்தை துவக்கி வைத்தனர். மேலாண் இயக்குனர் பேசுகையில், ''கோவை, திருப்பூர், நீலகிரி, ஈரோடு மாவட்டங்கள் அடங்கிய கோவை கோட்டத்தில் 1,500 நகரப் பேருந்துகளில், சராசரியாக தினமும் 5 லட்சத்து 25 ஆயிரம் பெண்கள், கட்டணமின்றி பயணிக்கின்றனர்" என்றார். விழாவில் ஒன்றிய கவுன்சிலர்கள் இந்திராணி, செல்வராஜ், சமூக ஆர்வலர்கள் இளங்கோ, பாலசுப்ரமணியம் உள்பட பலர் பங்கேற்றனர்.50 ஆண்டுகால கோரிக்கை நிறைவேறியதால், கிராம மக்கள் போக்குவரத்து கழக அதிகாரிகளுக்கு சால்வை அணிவித்து கவுரவித்தனர். இனிப்பு வழங்கி நன்றி தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X