பொது செய்தி

தமிழ்நாடு

13 ஏக்கர் குளம், 3 ஏக்கர் குட்டையாக சுருங்கியது! ஆக்கிரமிப்பை அகற்றாததால் அவலம்

Added : செப் 12, 2021
Share
Advertisement
கோவில்பாளையம்:கோவில்பாளையத்தில், 13 ஏக்கர் பரப்பளவுள்ள குளம் ஆக்கிரமிப்பால், 3 ஏக்கராக சுருங்கிவிட்டது. ஆக்கிரமிப்பை அகற்ற, அதிகாரிகள் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என, விவசாயிகள் புகார் தெரிவித்துள்ளனர்.கோவில்பாளையம் - துடியலுார் ரோட்டில் அண்ணாநகரில், வருவாய் துறைக்கு சொந்தமான, வாரி புறம்போக்கு நிலத்தில், 13 ஏக்கர் பரப்பளவில் குளம் இருந்தது. இக்குளம்

கோவில்பாளையம்:கோவில்பாளையத்தில், 13 ஏக்கர் பரப்பளவுள்ள குளம் ஆக்கிரமிப்பால், 3 ஏக்கராக சுருங்கிவிட்டது. ஆக்கிரமிப்பை அகற்ற, அதிகாரிகள் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என, விவசாயிகள் புகார் தெரிவித்துள்ளனர்.கோவில்பாளையம் - துடியலுார் ரோட்டில் அண்ணாநகரில், வருவாய் துறைக்கு சொந்தமான, வாரி புறம்போக்கு நிலத்தில், 13 ஏக்கர் பரப்பளவில் குளம் இருந்தது. இக்குளம் ஆக்கிரமிப்புக்கு உள்ளாகி தற்போது 3 ஏக்கராக சுருங்கி விட்டதாக புகார் எழுந்துள்ளது.இதுகுறித்து, இப்பகுதியைச் சேர்ந்த பொன்னுச்சாமி உள்ளிட்ட விவசாயிகள் கூறியதாவது:மழைக்காலங்களில், தெற்கு, மேற்கு மற்றும் வடக்கு பகுதியில் இருந்து இந்த குளத்திற்கு நீர் வரும். இந்த குளத்தில் நீர் தேங்கினால், பெருமாள் கோவில் கிணறு, வடக்கு பிள்ளையார் கோவில் கிணறு மற்றும் விவசாய தோட்டங்களில் நீர் ஊறும். 15 ஆண்டுகளுக்கு முன்பு நீர் நிற்காத இடங்களில், கடை, வீடுகள் கட்டப்பட்டன. ஆக்கிரமிப்பு எனத் தெரிந்தும், வருவாய்துறை அதிகாரிகளும் பேரூராட்சியும் கண்டுகொள்ளவில்லை.அதிகாரிகள் ஆய்வுமழை அதிகமாக பெய்தபோது, வீடுகள் மற்றும் கடைகளுக்குள் நீர் புகுந்தது. ஆய்வு செய்ய வந்த மாவட்ட அதிகாரிகள், குளத்தில் வசிப்போருக்கு வேறு இடத்தில் இடம் வழங்கப்படும்; ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும் என, தெரிவித்தனர். ஆனால், அதன்பிறகு எந்த நடவடிக்கையும் இல்லை.2015 இல் அப்போதைய ஆர்.டி.ஓ., மதுராந்தகி குளத்திலுள்ள 184 குடும்பங்களுக்கு மாற்று இடம் தந்து ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும் என உறுதியளித்தார். பேரூராட்சிகள் உதவி இயக்குனர் மற்றும் தாசில்தார் இந்த உத்தரவுக்கு உறுதியளித்தனர்.5 ஆண்டுகள்உறுதி அளித்து, ஐந்து ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது. ஆனாலும், ஆக்கிரமிப்புகள் அதிகரித்ததே தவிர, அகற்றப்படவில்லை.நீர்நிலைகளில் ஆக்கிரமிப்பு இருக்கக் கூடாது என, உயர்நீதிமன்றம் கண்டிப்பாக தெரிவித்துள்ளது, வருவாய்த் துறை அதிகாரிகள் கண்டுகொள்ளாமல் உள்ளனர்.வழித்தடங்களும்குளத்துக்கு நீர் மழை நீர் வரும் வழித்தடங்களும், ஆக்கிரமிப்பில் சிக்கியுள்ளன. இதனால் மழை நீர் வராமல் அருகில் உள்ள ஓட்டல், கடைகள் மற்றும் வீடுகளிலிருந்து சாக்கடை நீர் தான் குளத்தில் தேங்குகிறது. பலரும் கழிவுகள் மற்றும் குப்பைகளை இங்கு கொட்டுகின்றனர்.அரசு கட்டுமானங்கள்குளத்தில் அரசு கட்டுமானங்களை கட்டக் கூடாது என, அரசு ஆணை உள்ளது. ஆனாலும் 2 நவீன கழிப்பறைகள், நீர்த் தொட்டிகள் கட்டப்பட்டுள்ளன. குளத்திற்கு மழைநீர் வரும் பாதையை மாற்றி, வேறு திசையில் திருப்பி விட்டனர்.வருவாய்த்துறை அதிகாரிகள் உடனடியாக குளத்தில் ஆய்வு செய்து மீதமுள்ள இடத்தையாவது காப்பாற்ற வேண்டும். நீர் அதிகமாக தேங்கும் பகுதியில் குடியிருப்போருக்கு மாற்று இடம் தரவேண்டும்.இதனால், நீர்நிலை காப்பாற்றப்படும். சுற்றுவட்டாரத்தில் இருந்து வரும் மழைநீர் தேங்கும். நிலத்தடி நீர்மட்டம் உயரும்.இதுதொடர்பாக, தாசில்தார், கலெக்டருக்கு மனு அனுப்பியுள்ளோம். விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு, விவசாயிகள் தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X