பொது செய்தி

தமிழ்நாடு

2,276 பேர் 'நீட்' எழுதினர்

Added : செப் 12, 2021
Share
Advertisement
நேற்று நடந்த, மருத்துவப்படிப்பில் மாணவர் சேர்க்கைக்கான 'நீட்' நுழைவுத் தேர்வை, சூலுாரில் 1,859 பேர், மேட்டுப்பாளையத்தில் 417 பேர் என, மொத்தம் 2,276 பேர் எழுதினர்.மேட்டுப்பாளையம்மேட்டுப்பாளையம் அடுத்த ஆலாங்கொம்பில் எஸ்.எஸ்.வி.எம். சிபிஎஸ்இ பள்ளியில் 'நீட்' தேர்வு நடந்தது.35 வகுப்பறைகளில், வகுப்பறைக்கு, 12 பேர் அமர்ந்து தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டனர். ஒரு வகுப்புக்கு இரண்டு
 2,276 பேர் 'நீட்' எழுதினர்

நேற்று நடந்த, மருத்துவப்படிப்பில் மாணவர் சேர்க்கைக்கான 'நீட்' நுழைவுத் தேர்வை, சூலுாரில் 1,859 பேர், மேட்டுப்பாளையத்தில் 417 பேர் என, மொத்தம் 2,276 பேர் எழுதினர்.மேட்டுப்பாளையம்மேட்டுப்பாளையம் அடுத்த ஆலாங்கொம்பில் எஸ்.எஸ்.வி.எம். சிபிஎஸ்இ பள்ளியில் 'நீட்' தேர்வு நடந்தது.35 வகுப்பறைகளில், வகுப்பறைக்கு, 12 பேர் அமர்ந்து தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டனர். ஒரு வகுப்புக்கு இரண்டு ஆசிரியர்கள் வீதம், 70 பேர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.பல்வேறு மாவட்டங்களிலிருந்து வந்த, 284 மாணவிகள், 133 மாணவர்கள் என, மொத்தம், 417 பேர் தேர்வு எழுதினர்.முன்னதாக பள்ளியின் நுழைவாயில் அருகே, மாணவ, மாணவிகள் சோதனை செய்து அனுப்பப்பட்டனர்.எஸ்.எஸ்.வி.எம், பள்ளி நிர்வாகத்தினர், மேற்பார்வை பணியில் ஈடுபட்டனர். சிறுமுகை போலீசார், ஊர்க்காவல் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.சூலுார்சூலுாரில் ஆர்.வி.எஸ்., கலை அறிவியல் கல்லூரி மற்றும் கலைஞர் கருணாநிதி தொழில்நுட்பக் கல்லூரி ஆகிய இடங்களில் தேர்வு நடந்தது. தலா, 960 பேர் தேர்வு எழுத அனுமதி வழங்கப்பட்டிருந்தது.காலை, 11:00 மணி முதல் தேர்வர்கள் மையத்துக்கு வரத்துவங்கினர். அனைவருக்கும் உடல் வெப்ப பரிசோதனை நடந்தது. சானிடைசர் வழங்கப்பட்டது, முகக்கவசங்கள் அணிந்துள்ளனரா, ஹால் டிக்கெட்கள், மற்றும் சான்றுகள் சரிபார்க்கப்பட்டு, மையத்துக்குள் அனுமதிக்கப்பட்டனர்.மொத்தம் 61 பேர், தேர்வு எழுதாமல், 'ஆப்சென்ட்' ஆயினர். -நமது நிருபர் குழு-

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X