'பாரபட்சம் என்ற வார்த்தைக்கு மோடி அரசில் இடமில்லை'; நிர்மலா சீதாராமன்

Added : செப் 12, 2021
Share
Advertisement
அருப்புக்கோட்டை-''வளர்ச்சி பணிகளுக்கு நிதி ஒதுக்குவதில் பாரபட்சம் என்ற வார்த்தைக்கு மோடி அரசில் இடமே கிடையாது,'' என, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் நேற்று வங்கி அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய பின், அவர் அளித்த பேட்டி:பின்தங்கிய மாவட்டங்களை கண்டறிந்து, அதை மேம்படுத்த மத்திய அரசு உத்தரவிட்டது. அதன்படி,

அருப்புக்கோட்டை-''வளர்ச்சி பணிகளுக்கு நிதி ஒதுக்குவதில் பாரபட்சம் என்ற வார்த்தைக்கு மோடி அரசில் இடமே கிடையாது,'' என, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் நேற்று வங்கி அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய பின், அவர் அளித்த பேட்டி:பின்தங்கிய மாவட்டங்களை கண்டறிந்து, அதை மேம்படுத்த மத்திய அரசு உத்தரவிட்டது. அதன்படி, விருதுநகர் மாவட்டத்தில் அதிகாரிகளுடன் ஆலோசனை செய்தேன். சிவகாசி பட்டாசு பிரச்னை குறித்து, பட்டாசு தொழிலதிபர்கள் என்னிடமோ, மத்திய அமைச்சரிடமோ மனு கொடுத்தால் பரிசீலிக்கப்படும். துறைமுகங்களில் 'ரெய்டு' நடத்தி, சீன பட்டாசுகளை தடுத்து நிறுத்தியுள்ளோம்.

காங்., ஆட்சியில் சிதம்பரம் நிதியமைச்சராக இருந்தபோது தான், டில்லி ரயில் நிலையம் தனியாருக்கு வழங்கப்பட்டது. பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்குவது குறித்த சிதம்பரம் குற்றச்சாட்டுக்கு, துாங்குபவர்களை எழுப்பலாம். துாங்குவது போல நடிப்பவர்களை எழுப்ப முடியாது என்பது தான் பதில்.மதுரை - துாத்துக்குடி இரட்டை அகல ரயில்பாதை திட்டத்திற்கு நிதி ஒதுக்குவதில் பாரபட்சம் இருப்பதாக கூறுவோர் ஆதாரப்பூர்வமாக தெரிவிக்க வேண்டும். எல்லா வளர்ச்சி பணிகளுக்கும் சமமாக நிதி வழங்கப்படுகிறது. பாரபட்சம் என்ற வார்த்தைக்கு மோடி அரசில் இடமில்லை. பெண்களுக்கு பாதுகாப்பு கொடுக்கக்கூடிய ஒரே இயக்கமாக பா.ஜ., உள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.

காங்., - எம்.பி.,க்கு பதில்கூட்டத்திற்கு வருவதற்கு தனக்கு அழைப்பு விடுக்கவில்லை என, விருதுநகர் காங்., - எம்.பி., மாணிக்கம் தாகூர் சமூக வலைதளத்தில் பதிவிட்டிருந்தார். அது குறித்து கேட்டதற்கு, 'விருதுநகர் ஆய்வுக் கூட்டம் குறித்து, செப்., 8ம் தேதியே தமிழக தலைமை செயலர் இறையன்புவுக்கு தெரிவிக்கப்பட்டு விட்டது. அவர் தான், மக்கள் பிரதிநிதிகளுக்கு தகவல் தெரிவித்திருக்க வேண்டும். இது அவர் பொறுப்பு. இதில் எங்கள் தவறு இல்லை' என்றார் நிதியமைச்சர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X