சம்பவம் செய்தி

தமிழ்நாடு

சென்னை பெண் இன்ஸ்பெக்டர் எஸ்.ஐ., மீது ஆள் கடத்தல் வழக்கு

Added : செப் 12, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
துாத்துக்குடி--ஆசிரியரை வேனில் கடத்தி, 4.50 லட்சம் ரூபாய் பறித்த சென்னை பெண் இன்ஸ்பெக்டர், எஸ்.ஐ., உட்பட ஏழு பேர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.துாத்துக்குடி மாவட்டம் ஏரல் குறிப்பான்குளத்தைச் சேர்ந்தவர் சாலமன், 52; பள்ளி ஆசிரியர். கடந்த ஆண்டு அக்., 23 இரவில் சோலைக்குடியிருப்பில் நடந்த திருமண வரவேற்பிற்கு குடும்பத்தினருடன் சென்றிருந்தார். அவரை அங்கிருந்து

துாத்துக்குடி--ஆசிரியரை வேனில் கடத்தி, 4.50 லட்சம் ரூபாய் பறித்த சென்னை பெண் இன்ஸ்பெக்டர், எஸ்.ஐ., உட்பட ஏழு பேர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

துாத்துக்குடி மாவட்டம் ஏரல் குறிப்பான்குளத்தைச் சேர்ந்தவர் சாலமன், 52; பள்ளி ஆசிரியர். கடந்த ஆண்டு அக்., 23 இரவில் சோலைக்குடியிருப்பில் நடந்த திருமண வரவேற்பிற்கு குடும்பத்தினருடன் சென்றிருந்தார். அவரை அங்கிருந்து வெளியே வரவழைத்த கும்பல், கைகளை கட்டி வேனில் கடத்தியது.சென்னையில், 'சில்வர் டச் பைனான்ஸ்' என்ற சினிமா பைனான்சியர் சிவகுமாரிடம், ஆசிரியர் சாலமனின் தம்பி சினிமா ஒளிப்பதிவாளரான தேவராஜ், 21 லட்சம் ரூபாய் கடன் வாங்கியிருந்தார். அதற்காக, சாலமனை கடத்தினர்.

மறுநாள் வேன், சென்னை வளசரவாக்கம் போலீஸ் ஸ்டேஷனுக்கு எதிர்ப்புறம் சென்று நின்றது.தன்னை கடத்தியது பைனான்சியர் சிவகுமார், 45; வளசரவாக்கம் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் அமுதா, 45; எஸ்.ஐ., ரமேஷ்கண்ணன், 38, மற்றும் நான்கு போலீசார் என சாலமன் தெரிந்து கொண்டார்.அவரிடம் 3 லட்சம், வேன் வாடகை செலவு 1.50 லட்சம் என 4.50 லட்சம் ரூபாய் கேட்டு துன்புறுத்தினர். சாலமன் மனைவி புஷ்பராணியின் சகோதரர் ஸ்டீபன், பணத்தை போலீசாரிடம் கொடுத்து, சாலமனை மீட்டுச் சென்றார்.

இது குறித்து புஷ்பராணி, திருச்செந்துார் போலீசில் புகார் செய்தார். எஸ்.பி., - டி.ஜி.பி.,க்கும் புகார் அனுப்பினார். எந்த நடவடிக்கையும் எடுக்காததால், திருச்செந்துார் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.மாஜிஸ்திரேட் சரவணன், இது குறித்து வழக்கு பதிவு செய்யுமாறு திருச்செந்துார் போலீசாருக்கு உத்தரவிட்டார்.

இதையடுத்து, இன்ஸ்பெக்டர் அமுதா, எஸ்.ஐ., ரமேஷ் கண்ணன், பைனான்சியர் சிவகுமார் உட்பட ஏழு பேர் மீது ஆள் கடத்தல், தாக்குதல், அவதுாறாக திட்டுதல் உள்ளிட்ட ஜாமினில் வெளிவர முடியாத 11 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Maatram makkalidathil irundhu varavendum - chennai,இந்தியா
16-செப்-202110:07:00 IST Report Abuse
Maatram makkalidathil irundhu varavendum Police DGP ku complaint panniye onnum aagalaina appuram thappu pannura cons kavaadhu bayam Varuma?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X