சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கொலை குற்றம் சாட்டப்பட்டவர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை

Added : செப் 12, 2021
Share
Advertisement
சூலுார்:கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த, வடமாநில வாலிபர், ரயிலில் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்.பீகார் மாநிலத்தைச் சேர்ந்த ராஜேஷ் தாக்கூர், சூலுார் அடுத்த, பட்டணம் காவேரி நகர் பகுதியில் தங்கி, கட்டட வேலை செய்துவந்தார்.அவருடன், உறவினரான மேற்கு வங்கத்தை சேர்ந்த சிபு தாக்கூரும், தங்கி, வேலை செய்து வந்துள்ளார். கடந்த, 5ம் தேதி இரவு, இருவருக்கும் இடையில் தகராறு

சூலுார்:கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த, வடமாநில வாலிபர், ரயிலில் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்.பீகார் மாநிலத்தைச் சேர்ந்த ராஜேஷ் தாக்கூர், சூலுார் அடுத்த, பட்டணம் காவேரி நகர் பகுதியில் தங்கி, கட்டட வேலை செய்துவந்தார்.அவருடன், உறவினரான மேற்கு வங்கத்தை சேர்ந்த சிபு தாக்கூரும், தங்கி, வேலை செய்து வந்துள்ளார். கடந்த, 5ம் தேதி இரவு, இருவருக்கும் இடையில் தகராறு நடந்துள்ளது. ஆத்திரமடைந்த சிபு தாக்கூர், ராஜேஷ் தாக்கூரை கடப்பாரையால் தாக்கி, கொலை செய்துவிட்டு தலைமறைவானார்.வழக்குப்பதிவு செய்த சூலுார் போலீசார், சிபு தாக்கூரை தேடி வந்தனர்.சிபு, ரயிலில் சென்னைக்கு, தப்பிச் சென்றதை அறிந்த போலீசார், அங்கு விரைந்தனர். அதற்குள், சிபு சொந்த ஊரான, மேற்கு வங்கம் மாநிலம், சேத்பாரா கிராமத்துக்கு தப்பிசென்றார்.தன்னை போலீசார் தேடி வருவதை அறிந்து, அச்சமடைந்த சிபு தாக்கூர், ஓடும்ரயில் முன் பாய்ந்து, தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து மேற்கு வங்க போலீசார், சூலுார் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.இதையடுத்து, குற்றம் சாட்டப்பட்டவர் தற்கொலை செய்து கொண்டது குறித்த அறிக்கையை, கோர்ட்டில் தாக்கல் செய்ய, போலீசார் முடிவு செய்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X