பொது செய்தி

தமிழ்நாடு

வனக்கல்லூரி மாணவர்களுடன் எம்.எல்.ஏ., சந்திப்பு: கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வர உறுதி

Added : செப் 12, 2021
Share
Advertisement
மேட்டுப்பாளையம்:பட்டுப்புழுவியல் துறை மாணவர்கள் பிரச்னை குறித்து, சட்டசபையில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வரப்படும் என, எம்.எல்.ஏ., செல்வராஜ் தெரிவித்தார்.வேளாண் பல்கலை நிர்வாகம், பட்டுப்புழுவியல் பட்டப்படிப்புக்கு மாணவர் சேர்க்கையை, இரண்டு ஆண்டுகளுக்கு நிறுத்தி வைத்துள்ளது.மேட்டுப்பாளையம் வனக்கல்லுாரியில் செயல்படும், பட்டுப்புழுவியல் துறை வகுப்பு மாணவ,
 வனக்கல்லூரி மாணவர்களுடன் எம்.எல்.ஏ., சந்திப்பு: கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வர உறுதி

மேட்டுப்பாளையம்:பட்டுப்புழுவியல் துறை மாணவர்கள் பிரச்னை குறித்து, சட்டசபையில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வரப்படும் என, எம்.எல்.ஏ., செல்வராஜ் தெரிவித்தார்.வேளாண் பல்கலை நிர்வாகம், பட்டுப்புழுவியல் பட்டப்படிப்புக்கு மாணவர் சேர்க்கையை, இரண்டு ஆண்டுகளுக்கு நிறுத்தி வைத்துள்ளது.மேட்டுப்பாளையம் வனக்கல்லுாரியில் செயல்படும், பட்டுப்புழுவியல் துறை வகுப்பு மாணவ, மாணவிகள், பல்கலையின் இந்த உத்தரவுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், இத்துறைக்கு என தனியாக கல்லுாரி அமைக்க வேண்டும் என்று வலியுறுத்தியும், வகுப்புகளைப் புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், நேற்று முன்தினம், பட்டுப்புழுவியல் துறை இளங்கலை, முதுகலை பட்டப்படிப்பு, ஆராய்ச்சி ஆகிய வகுப்புகளை, வனக்கல்லுாரி நிர்வாகம் காலவரையின்றி மூடுவதாக அறிவித்துள்ளது; விடுதிகளும் மூடப்பட்டன. இதனால் மாணவ, மாணவிகள் தங்கள் உடமைகளுடன், வகுப்பறை கட்டடம் முன் அமர்ந்து, போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மாணவர்களிடம், கோவை மாவட்ட வருவாய் அலுவலர் லீலா அலெக்ஸ், வடக்கு ஆர்.டி.ஓ., ரவிச்சந்திரன், வனக்கல்லுாரி டீன் பார்த்திபன், டி.எஸ்.பி., ஜெய்சிங், தாசில்தார் ஷர்மிளா ஆகியோர், பேச்சு நடத்தினர். இதில், உடன்பாடு ஏற்படாததால் அதிகாரிகள் சென்றுவிட்டனர்.எம்.எல்.ஏ., சந்திப்புஇந்நிலையில், நேற்று காலை, மேட்டுப்பாளையம் எம்.எல்.ஏ., செல்வராஜ் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மாணவர்களைச் சந்தித்து, கோரிக்கைகளை கேட்டறிந்தார்.அதன் பின், செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில், "அரசு நடப்பாண்டில் பட்டுப்புழுவியல் துறையில் மாணவர்களை சேர்ப்பது குறித்து, சட்டசபையில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவந்து, வலியுறுத்துவோம்," என்றார்.அப்போது, மாவட்ட ஜெ. பேரவை செயலாளர் நாசர், இளைஞரணி செயலாளர் சலீம் மற்றும் கட்சி நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X