சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ரூ 13.65 லட்சம் நூதன மோசடி

Added : செப் 12, 2021
Share
Advertisement
புதுச்சேரி-புதுச்சேரியைச் சேர்ந்தவர் மனோகரன்; டைல்ஸ் கடை நடத்தி வருகிறார். இவரது மனைவி ஜெயந்தி, 42; இவருக்கு, 'பேஸ்புக்'கில், இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த எரிக்வால்கர் அறிமுகமானார்.தான் டாக்டர் என தெரிவித்து, ஜெயந்தியின் மகளுக்கு பிறந்த நாள் என்பதால், தங்க நகை உள்ளிட்ட விலை உயர்ந்த பரிசு பொருள் அனுப்பியுள்ளதாக கூறியுள்ளார்.ஜூலை 26ல், டில்லி விமான நிலையத்தில் இருந்து

புதுச்சேரி-புதுச்சேரியைச் சேர்ந்தவர் மனோகரன்; டைல்ஸ் கடை நடத்தி வருகிறார். இவரது மனைவி ஜெயந்தி, 42; இவருக்கு, 'பேஸ்புக்'கில், இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த எரிக்வால்கர் அறிமுகமானார்.தான் டாக்டர் என தெரிவித்து, ஜெயந்தியின் மகளுக்கு பிறந்த நாள் என்பதால், தங்க நகை உள்ளிட்ட விலை உயர்ந்த பரிசு பொருள் அனுப்பியுள்ளதாக கூறியுள்ளார்.ஜூலை 26ல், டில்லி விமான நிலையத்தில் இருந்து பேசிய அங்கீதா என்ற பெண், தான் விமான நிலைய அதிகாரி என தெரிவித்துள்ளார். இங்கிலாந்தில் இருந்து விலை உயர்ந்த 'பார்சல்' வந்துள்ளதாகவும், அபராதம் செலுத்தினால் விடுவிப்பதாகவும் கூறியுள்ளார்.அபராத தொகை செலுத்த, வங்கி கணக்கு எண்ணையும் அனுப்பியுள்ளார். ஜெயந்தி, 13.65 லட்சத்தை செலுத்தி உள்ளார். ஆனால், பரிசு பொருள் வரவில்லை. நேற்று முன்தினம் ஜெயந்தி புகாரின்படி, சைபர் கிரைம் போலீசார், எரிக்வால்கர் மற்றும் அங்கீதா மீது வழக்கு பதிந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X