பொது செய்தி

தமிழ்நாடு

கேரள-- தமிழக எல்லையில் தீவிர சோதனை: 'நிபா' வைரஸ் பரவலால் உஷார்

Added : செப் 12, 2021
Share
Advertisement
பெ.நா.பாளையம்;கேரள பயணிகளால், தமிழகத்தில் தொற்று பரவாமல் கட்டுப்படுத்த தமிழக, கேரளா எல்லையில் உள்ள ஆனைகட்டியில் தீவிர பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.கேரளத்தில் பரவும் நிபா வைரஸ் எதிரொலியாக, மாவட்ட எல்லையில் உள்ள வேலந்தாவளம், மீனாட்சிபுரம், ஆனைகட்டி உள்ளிட்ட, 13 சோதனை சாவடிகளில் சுகாதாரத்துறையினர் கூடுதல் பணியாளர்களை நியமித்து, கண்காணிப்பை தீவிரப்படுத்தி

பெ.நா.பாளையம்;கேரள பயணிகளால், தமிழகத்தில் தொற்று பரவாமல் கட்டுப்படுத்த தமிழக, கேரளா எல்லையில் உள்ள ஆனைகட்டியில் தீவிர பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.கேரளத்தில் பரவும் நிபா வைரஸ் எதிரொலியாக, மாவட்ட எல்லையில் உள்ள வேலந்தாவளம், மீனாட்சிபுரம், ஆனைகட்டி உள்ளிட்ட, 13 சோதனை சாவடிகளில் சுகாதாரத்துறையினர் கூடுதல் பணியாளர்களை நியமித்து, கண்காணிப்பை தீவிரப்படுத்தி வருகின்றனர். கேரள மாநிலம், பாலக்காடு, மன்னார்காடு உள்ளிட்ட பகுதிகளிலிருந்து, ஆனைகட்டி வழியாக கோவைக்கு வரும் நபர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இவர்களில் தொற்று நபர்களை அடையாளம் காணும் நடவடிக்கையில், வருவாய்த்துறையினர், சுகாதாரத் துறையினர் மற்றும் போலீசார் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.கேரளாவிலிருந்து வரும் பயணிகள் தொற்று பரிசோதனைக்கு உட்படுத்தப்படுகிறார்கள்.இதுகுறித்து சுகாதாரத் துறையினர் கூறியதாவது: கேரளாவில் இருந்து தமிழகத்திற்குள் நுழையும் பயணிகள், தீவிர பரிசோதனைக்கு பின்னரே, அனுமதிக்கப்படுகின்றனர். அவர்களில், தொற்று இல்லை என கடந்த, 72 மணி நேரத்திற்குள் சான்றிதழ் பெற்றவர்கள் மற்றும் இரண்டு தவணை தடுப்பூசி செலுத்தியவர்கள் மட்டுமே உரிய ஆவணங்கள் பரிசோதனை செய்யப்பட்ட பின்னர் அனுமதிக்கப்படுகின்றனர்.ஆவணங்கள் இல்லாதவர்கள் திருப்பி அனுப்பப்படுகின்றனர். மேலும், சிலருக்கு ஆதார் அடையாள அடிப்படையில், தொற்று பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட பின்னர், நிபந்தனைகளுக்குட்பட்டு அனுமதிக்கப்படுகின்றனர்.இவ்வாறு, அவர்கள் தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X