அரசியல் செய்தி

தமிழ்நாடு

'நீட்' தேர்வில் அ.தி.மு.க., இரட்டை வேடம்

Added : செப் 13, 2021 | கருத்துகள் (2)
Share
Advertisement
ராஜபாளையம்---''நீட்''தேர்வு விவகாரத்தில் அ.தி.மு.க., இரட்டை வேடம் போடுகிறது," என ராஜபாளையத்தில் நடந்த தடுப்பூசிமுகாம் ஆய்வில் மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் சுப்பிரமணியன் குற்றம் சாட்டினார்.அவர் கூறியதாவது:'நீட்' விவகாரத்தில் அ.தி.மு.க.,வின் சாயம் வெளுத்துவிட்டது. அவர்கள் இரட்டை வேடம் போட்டு வருகின்றனர். சேலத்தில் மாணவன் அநியாயமாக உயிரிழந்துள்ளார். இனிமேல்

ராஜபாளையம்---''நீட்''தேர்வு விவகாரத்தில் அ.தி.மு.க., இரட்டை வேடம் போடுகிறது," என ராஜபாளையத்தில் நடந்த தடுப்பூசிமுகாம் ஆய்வில் மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் சுப்பிரமணியன் குற்றம் சாட்டினார்.

அவர் கூறியதாவது:'நீட்' விவகாரத்தில் அ.தி.மு.க.,வின் சாயம் வெளுத்துவிட்டது. அவர்கள் இரட்டை வேடம் போட்டு வருகின்றனர். சேலத்தில் மாணவன் அநியாயமாக உயிரிழந்துள்ளார். இனிமேல் இதுபோல் நடக்கக் கூடாது என்ற வருத்தத்தை முதல்வர் பதிவு செய்துள்ளார். 'நீட்' தேர்வுக்கு எதிராக அதில் இருந்து விலக்கு பெற்று தீருவது என்ற வகையில் சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட உள்ளது.2017 ல் அ.தி.மு.க., அரசு நீட் தேர்வுக்கு எதிராக நிறைவேற்றிய தீர்மானத்தை எதிர்க்கட்சி தலைவராக இருந்த ஸ்டாலின் ஒன்றுபட்டு நிறைவேற்றினார்.

அ.தி.மு.க., தொடர்ந்து அந்த தீர்மானத்திற்கு அழுத்தம் தராமல் ஜனாதிபதியிடம் எந்த வலியுறுத்தலும் செய்யாத நிலையில் அது திரும்பி வந்துவிட்டது. எனினும் தி.மு.க., அரசின் தொடர் நடவடிக்கையால் அடுத்தடுத்து வரும் காலத்தில் மாணவர்களுக்கு 'நீட் தொல்லை இருக்காது என கருதுகிறோம், என்றார்.

Advertisement


வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Nanban - Kajang,மலேஷியா
13-செப்-202107:55:09 IST Report Abuse
Nanban முட்டாள் தனமாக பேசியே மாணவர்களை இவர்கள் தற்கொலைக்கு தூண்டுவார்கள் , நீட் என்பது இனி தவிர்க்க முடியாத ஒன்று ஆனால் பாருங்கள் இனி நீட் இருக்காது என்று அமைச்சர் அரை வேக்காட்டு தனமாக கூறுகிறார்.
Rate this:
Cancel
BASKAR TETCHANA - Aulnay ,பிரான்ஸ்
13-செப்-202102:38:54 IST Report Abuse
BASKAR TETCHANA உனக்கு நீட் தேர்வை பற்றி அறிக்கை விட அருகதை தகுதி எதுவுமே கிடையாது. சிஸ்டமே சரியில்லாமல் ஆட்சி நடத்து உங்களுக்கு என்ன தெரியும். உங்களை விட எவ்வளவோ அறிவாளிகளை கலந்து ஆலோசிக்காமல் நீட் தேர்வை அனுமதிக்க மாட்டார்கள். எல்லா மாநிலங்களும் ஒத்து போகும் பொது உங்களுக்கு என்ன.உங்களால் முடியாது என்று தெரிந்து தான் கிட்டத்தட்ட ஒன்னரை லட்சம் மாணவர்கள் பரீட்சை எழுதி உள்ளனர். இதில் எல்லா மாணவர்களும் துணிந்தவனுக்கு தூக்கமில்லை என்று பரீட்சை எழுதி உள்ளனர். உங்களை பணமே குறிக்கோள் என்று வாழவில்லை. நீங்கள் 5 வருடம் தான் ஆட்டமுடியும் அதற்க்கு அப்புறம் யார் யார் எங்கு காளி தின்கிறிர்களோ யார் கண்டது. ஜெய் ஹிந்த்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X