பொது செய்தி

தமிழ்நாடு

காஞ்சி விஜயேந்திரரை சந்தித்து ஆசி பெற்றார் கவர்னர் பன்வாரிலால் புரோஹித்

Updated : செப் 13, 2021 | Added : செப் 13, 2021 | கருத்துகள் (2)
Share
Advertisement
காஞ்சிபுரம்: ஓரிக்கை மஹா சுவாமிகள் மணி மண்டபத்தில், காஞ்சி சங்கர மடத்தின் பீடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளை, கவர்னர் பன்வாரிலால் புரோஹித் சந்தித்து ஆசி பெற்றார்.காஞ்சிபுரம் ஓரிக்கை மஹா சுவாமிகள் மணி மண்டபத்தில், காஞ்சி சங்கர மடத்தின் பீடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள், தற்போது சாதுர்மாஸ்ய விரதம் மேற்கொண்டு வருகிறார். நேற்று காலை அவரை, தமிழக கவர்னர்

காஞ்சிபுரம்: ஓரிக்கை மஹா சுவாமிகள் மணி மண்டபத்தில், காஞ்சி சங்கர மடத்தின் பீடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளை, கவர்னர் பன்வாரிலால் புரோஹித் சந்தித்து ஆசி பெற்றார்.



latest tamil news


காஞ்சிபுரம் ஓரிக்கை மஹா சுவாமிகள் மணி மண்டபத்தில், காஞ்சி சங்கர மடத்தின் பீடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள், தற்போது சாதுர்மாஸ்ய விரதம் மேற்கொண்டு வருகிறார். நேற்று காலை அவரை, தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோஹித் சந்தித்தார். மணி மண்டபத்தில் நடைபெற்ற பூஜையிலும் பங்கேற்றார்.


latest tamil news


பின், விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளுடன் தனியாக ஆலோசித்தார். தொடர்ந்து அவரிடம் ஆசி பெற்றதும், மதியம் 12:30 மணிக்கு மணி மண்டபத்தில் இருந்து புறப்பட்டு சென்றார். கடந்த ஜூலை மாதம், ஓரிக்கை மணி மண்டபத்தில், விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளை பன்வாரிலால் புரோஹித் சந்தித்து ஆசி பெற்றது குறிப்பிடத்தக்கது. விரைவில், பஞ்சாப் மாநில கவர்னராக பொறுப்பேற்க உள்ளதால், அங்கு செல்வதற்கு முன் ஆசி பெற வந்ததாக கூறப்படுகிறது.

Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Vittalanand -  ( Posted via: Dinamalar Android App )
13-செப்-202114:52:58 IST Report Abuse
Vittalanand இன்னும் juniper நியமனம் செய்ய வில்லையே
Rate this:
Cancel
karuppasamy - chennai,இந்தியா
13-செப்-202112:01:50 IST Report Abuse
karuppasamy ஒருவருக்கே பதவி கொடுப்பதைவிட மற்றவர்களுக்கும் பகிர்ந்து அழிப்பது நல்லது
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X