இணையச்சீட்டு இலக்கு 10 ஆயிரத்திற்கு உயர்த்தல்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

இணையச்சீட்டு இலக்கு 10 ஆயிரத்திற்கு உயர்த்தல்

Added : செப் 13, 2021
Share
மாமல்லபுரம் : மாமல்லபுரம், தொல்லியல் சின்னங்கள், இணைய நுழைவுச் சீட்டிற்கான, தினசரி எண்ணிக்கை இலக்கு, 10 ஆயிரத்திற்கு உயர்த்தப்பட்டது.பல்லவர் தொல்லியல் சின்னங்கள் அமைந்துள்ள மாமல்லபுரம், சுற்றுலா பகுதியாக விளங்குகிறது. சிற்பங்களை காண, பயணியர் சுற்றுலா வருகின்றனர்.கொரோனா வைரஸ் தொற்று தடுப்பு ஊரடங்கு காரணமாக, தொல்லியல் சின்னங்கள், கடந்த ஆண்டில், ஒன்பது மாதங்கள், இந்த

மாமல்லபுரம் : மாமல்லபுரம், தொல்லியல் சின்னங்கள், இணைய நுழைவுச் சீட்டிற்கான, தினசரி எண்ணிக்கை இலக்கு, 10 ஆயிரத்திற்கு உயர்த்தப்பட்டது.

பல்லவர் தொல்லியல் சின்னங்கள் அமைந்துள்ள மாமல்லபுரம், சுற்றுலா பகுதியாக விளங்குகிறது. சிற்பங்களை காண, பயணியர் சுற்றுலா வருகின்றனர்.கொரோனா வைரஸ் தொற்று தடுப்பு ஊரடங்கு காரணமாக, தொல்லியல் சின்னங்கள், கடந்த ஆண்டில், ஒன்பது மாதங்கள், இந்த ஆண்டில், இரண்டரை மாதங்களும் மூடப்பட்டு, சுற்றுலா முடங்கியது.தளர்வுகளைத் தொடர்ந்து, சுற்றுலாவிற்கு அனுமதித்து, ஜூன் 28ல், தொல்லியல் சின்னங்கள் திறக்கப்பட்டு, பயணியர் வருகின்றனர்.

தொல்லியல் துறை, அதன் கவுன்டரில் நுழைவுச்சீட்டு வழங்காமல், தினசரி, 5,000 பயணியர் இலக்கில், இணையச்சீட்டு வழங்கியது.துவக்கத்தில், பயணியர் குறைவாக வந்து, தற்போது, வார இறுதி நாட்களில் அதிகம் குவிகின்றனர். இந்நாட்களில், பிற்பகல் கடந்து, சீட்டு எண்ணிக்கை இலக்கு முடிந்து, அதன்பின் வரும் பயணியர், சீட்டு பதிவிறக்க இயலாத நிலை ஏற்பட்டது.இதையடுத்து, துறை நிர்வாக அனுமதி பெற்று, கவுன்டர் சீட்டு வழங்கப்பட்டது.இச்சிக்கலை தவிர்க்க, இணையச்சீட்டு இலக்கு, தற்போது, 5,000த்தில் இருந்து, 10 ஆயிரத்திற்கு உயர்த்தப்பட்டுள்ளதாக, தொல்லியல் துறையினர் தெரிவித்தனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X