பொது செய்தி

தமிழ்நாடு

மெகா முகாமில் தடுப்பூசி கிடைக்காமல் தவிப்பு: மக்கள் கடும் அதிருப்தி

Added : செப் 13, 2021
Share
Advertisement
நேற்று நடைபெற்ற மெகா தடுப்பூசி முகாம்களில், போதுமான தடுப்பூசிகள் ஒதுக்கீடு செய்யப்படாததால், பொதுமக்கள் நீண்ட நேரம் காத்திருந்தனர். நிர்ணயித்த இலக்கில் 35 சதவீதம் பேருக்கு மட்டுமே தடுப்பூசி போட முடிந்தது.அன்னுார் அன்னுார் தாலுகாவில், நேற்று நடந்த மெகா முகாமில், 8,944 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டது.அன்னுார் தாலுகாவில், நேற்று 120 மையங்களில், 25 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி
 மெகா முகாமில் தடுப்பூசி கிடைக்காமல் தவிப்பு: மக்கள் கடும் அதிருப்தி

நேற்று நடைபெற்ற மெகா தடுப்பூசி முகாம்களில், போதுமான தடுப்பூசிகள் ஒதுக்கீடு செய்யப்படாததால், பொதுமக்கள் நீண்ட நேரம் காத்திருந்தனர். நிர்ணயித்த இலக்கில் 35 சதவீதம் பேருக்கு மட்டுமே தடுப்பூசி போட முடிந்தது.அன்னுார் அன்னுார் தாலுகாவில், நேற்று நடந்த மெகா முகாமில், 8,944 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டது.அன்னுார் தாலுகாவில், நேற்று 120 மையங்களில், 25 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி போட ஏற்பாடு செய்யப்பட்டது.
அரசு மருத்துவமனை செவிலியர்களுடன், தனியார் மருத்துவமனை மற்றும் தனியார் நர்சிங் கல்லுாரி செவிலியர்கள் தடுப்பூசி போடும் பணியில் ஈடுபட்டனர்.பெரும்பாலான மையங்களுக்கு, 50 தடுப்பூசிகள் மட்டுமே வழங்கப்பட்டிருந்தன. பொன்னே கவுண்டன்புதுார், கணுவக்கரை, ஆம்போதி உள்ளிட்ட பல ஊர்களில் நீண்ட வரிசையில் பொதுமக்கள் நீண்ட நேரம் காத்திருந்தனர். தகவல் அறிந்து சுகாதாரத்துறையினர் வேறு இடங்களிலிருந்து தடுப்பூசிகளை பெற்று, அந்த முகாம்களுக்கு அனுப்பி வைத்தனர்.ஆனாலும், ஏராளமானவர்கள் தடுப்பூசி கிடைக்காமல் திரும்பிச் சென்றனர்.

கூடுதலாக தடுப்பூசி ஒதுக்கி இருந்தால், நேற்று மேலும் 3,000 பேருக்கு மேல் தடுப்பூசி போட்டிருப்பார். மாவட்ட நிர்வாகம் கூடுதலாக தடுப்பூசி ஒதுக்காததால் நிர்ணயிக்கப்பட்ட இலக்கில் 35 சதவீதத்தை மட்டுமே எட்ட முடிந்தது.மேட்டுப்பாளையம்நகராட்சியில், 31 இடங்களில் முகாம்கள் அமைக்கப்பட்டிருந்தன. ஒரு முகாமுக்கு, 70 தடுப்பூசிகள் ஒதுக்கப்பட்டன. மொத்தம், 2,500 பேருக்கு தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன.காரமடை ஒன்றியத்தில், 134 இடங்களில் கொரோனா தடுப்பூசி முகாம்கள் அமைக்கப்பட்டிருந்தன.

ஒரு முகாமிற்கு, 40 தடுப்பூசிகள் மட்டுமே ஒதுக்கப்பட்டிருந்தன.பெரும்பாலான முகாம்களில் காலை, 9:00 மணிக்கு, 40 தடுப்பூசிகளும் தீர்ந்தது. 15க்கும் மேற்பட்ட முகாம்களில், தடுப்பூசி பற்றாக்குறையால், பொதுமக்கள் காத்திருந்தனர்.காரமடை வட்டார தலைமை டாக்டர் சுதாகர், சுகாதார ஆய்வாளர் சண்முகசுந்தரம் ஆகியோர் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில், இருப்பில் உள்ள தடுப்பூசிகளை ஆங்காங்கே பிரித்துக் கொடுத்து, காத்திருந்த பொதுமக்களுக்கு தடுப்பூசிகளை போட்டு அனுப்பினர்.

மேட்டுப்பாளையம் நகரம், காரமடை ஒன்றியத்தில் மொத்தமாக, 10, 510 நபர்களுக்கு தடுப்பூசிகள் போடப்பட்டன.சூலுார்சூலுார் மற்றும் சுல்தான்பேட்டை ஒன்றியங்களில் 175 மையங்களில், நேற்று மெகா தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டது.ஒவ்வொரு மையத்துக்கும், 100க்கும் குறைவான தடுப்பூசிகள் மட்டுமே ஒதுக்கப்பட்டிருந்தன. இதனால், குறைந்த அளவு மக்களே தடுப்பூசி கள் செலுத்திக்கொள்ளமுடிந்தது.

அந்த மையத்தில் இருக்கிறது; இங்கு இருக்கிறது என அலைய வேண்டிய நிலை ஏற்பட்டது. மற்றவர்கள் தடுப்பூசி செலுத்திக் கொள்ள முடியாமல் திரும்பிச்சென்றனர்.இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில்,'குறைந்த தடுப்பூசிகள் மட்டுமே ஒதுக்கியதால், சில மணி நேரத்தில் தீர்ந்துவிட்டது.அதிக தடுப்பூசிகளை இருப்பு வைத்துக்கொண்டு, முகாமை நடத்த திட்டமிட்டிருந்தால் நன்றாக இருந்து இருக்கும். அதிகளவு மக்களும் தடுப்பூசி செலுத்திக் கொண்டிருக்க முடியும்' என்றனர்.-நமது நிருபர் குழு-

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X