பொது செய்தி

தமிழ்நாடு

வாங்க, வந்து உங்க கருத்த சொல்லுங்க! கலெக்டர் ஆபிசுக்கு கூப்புடுறாங்க

Added : செப் 13, 2021
Share
Advertisement
கருமத்தம்பட்டி;கருமத்தம்பட்டி பேரூராட்சியை, நகராட்சியாக தரம் உயர்த்துவது தொடர்பாக, பொதுமக்களிடம் கருத்து கேட்பு கூட்டம், நாளை கலெக்டர் அலுவலகத்தில் நடக்கிறது.கோவை மாவட்டத்தில் உள்ள கருமத்தம்பட்டி, கூடலுார், காரமடை, மதுக்கரை உள்ளிட்ட நான்கு பேரூராட்சிகளை, நகராட்சிகளாக தரம் உயர்த்துவதாக நகராட்சி நிர்வாகத்துறை அறிவித்துள்ளது.கடந்த மாதத்தில், ஊரக வளர்த்துறை

கருமத்தம்பட்டி;கருமத்தம்பட்டி பேரூராட்சியை, நகராட்சியாக தரம் உயர்த்துவது தொடர்பாக, பொதுமக்களிடம் கருத்து கேட்பு கூட்டம், நாளை கலெக்டர் அலுவலகத்தில் நடக்கிறது.கோவை மாவட்டத்தில் உள்ள கருமத்தம்பட்டி, கூடலுார், காரமடை, மதுக்கரை உள்ளிட்ட நான்கு பேரூராட்சிகளை, நகராட்சிகளாக தரம் உயர்த்துவதாக நகராட்சி நிர்வாகத்துறை அறிவித்துள்ளது.கடந்த மாதத்தில், ஊரக வளர்த்துறை சார்பில், நான்கு பேரூராட்சிகளை ஒட்டியுள்ள கிராம ஊராட்சி தலைவர்கள் மற்றும் வார்டு உறுப்பினர்களிடம் கருத்து கேட்பு கூட்டம் நடந்தது.அதில், கருமத்தம்பட்டியை சுற்றியுள்ள கணியூர், கருமத்தம்பட்டி, கரவளி மாதப்பூர், செம்மாண்டம்பாளையம் ஊராட்சி மக்கள் பிரதிநிதிகள் பங்கேற்று, கருமத்தம்பட்டி நகராட்சியுடன் இணைய விருப்பம் இல்லை என, கருத்து தெரிவித்து இருந்தனர்.இந்நிலையில், கோவை கலெக்டர் அலுவலகத்தில், நாளை மீண்டும் கருத்து கேட்பு கூட்டம் நடக்கிறது.அதில், நகராட்சியாக தரம் உயர்த்தப்படும் பேரூராட்சிகளை சேர்ந்த முன்னாள் தலைவர்கள், கவுன்சிலர்கள், பொதுமக்கள், அருகில் உள்ள ஊராட்சிகளை சேர்ந்த மக்கள் பிரதிநிதிகள், தன்னார்வலர்கள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.இதையடுத்து, கூட்டத்தில் பங்கேற்று தங்கள் கருத்துகளை தெரிவிக்க, கணியூர், கரவளி மாதப்பூர், கிட்டாம்பாளையம் மற்றும் செம்மாண்டாம்பாளையம் ஊராட்சி தலைவர்கள் மற்றும் கவுன்சிலர்கள், பொதுமக்கள் தயாராகி வருகின்றனர்.தங்கள் பகுதி ஊராட்சியாகவே தொடர வேண்டும், என்ற கருத்தை மீண்டும் வலியுறுத்த உள்ளதாக, அவர்கள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X